ஆன்மிக உணர்வுக்கு துணை நிற்கும் சின்னங்கள் :

திரிசூலம் :

ஆணவம், கன்மம், மாயை எனும் மூன்று வித இருளை நீக்கும் அடையாளமாகவும், தீய சக்திகளை அழிக்கும் என்ற தத்துவமாகவும் திரிசூலம் உள்ளது. திரி சூலத்தில் உள்ள மூன்று கூர்மையான பகுதிகள், மனித வாழ்வின் மூன்று நிலைகளான விழிப்பு, கனவு மற்றும் தூக்கம் ஆகிய நிலைகளையும்குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மூன்று நிலைகளிலும் மனிதர்கள் எப்போதும் ஒன்றுபட்ட நிலையில் இருக்கவேண்டும் என்பதை சூலத்தின் வடிவம் எடுத்துக்காட்டுகிறது.

Related image

ஸ்ரீ சக்கரம்:

சக்தி வழிபாடுகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் ஸ்ரீ சக்கர வழிபாடானது, நமது நாட்டின் பல இடங்களில் பிரபலமாக இருந்து வருகிறது. காமாட்சி, துர்க்கை, ராஜராஜேஸ்வரி, லலிதாம்பிகை போன்ற தெய்வங்களுக்கு ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்வதும், அதை தனிப்பட்ட முறையில் வழிபாடு செய்வதும் வழக்கத்தில் இருந்து வருகிறது.

Image result for ஸ்ரீ சக்கரம்:

ஓம்காரம்:

ஓம் என்ற சொல் தமிழில் பிரணவ மந்திரமாக குறிக்கப்படு கிறது. ஏனென்றால் அதற்குள் நல்ல அதிர்வுகள் உள்ளார்ந்து அடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

Image result for ஓம்காரம்:

ஷட்கோணம் :

ஆன்மிகத்தில் முக்கோணத்திற்கு தனிப்பட்ட சிறப்பு உண்டு. முக்கோணம் என்பது சத்வம், ராஜசம், தாமசம் என்ற முக்குணங் களை உணர்த்துகிறது. முக்கோணத்தின் உச்சி கீழ்நோக்கி இருந்தால் அது சக்தியாகிய பெண் அம்சமாகவும், மேல்நோக்கி இருந்தால் சிவமாகிய ஆண் அம்சத்தையும் குறிப்பிடும். இரண்டும் இணைந்த அறுங்கோணமானது சிவசக்தி ஐக்கியத்தையும், உலகத்தின் தோற்றத்தையும் குறிக்கிறது.

Image result for ஷட்கோணம் :

பூரண கலச சின்னம்:

மண்ணால் ஆன அல்லது செம்பு, பித்தளை, தாமிரம் போன்ற உலோகங் களால் செய்யப்பட்ட, நீர் நிறைந்த பாத்திரத்தின் மேல் தேங்காய் வைத்து அதில் மாவிலைகள் செருகி வைக்கப்படும் அமைப்பு கலசம் எனப்படுகிறது. இந்த கலசத்தின் உள்ளிருக்கும் நீர் புனித நதிகளின் நீராகவும், அதில் வாசனாதி திரவியங்கள் கலக்கப்பட்டதாகவும் இருக்கும். வெண்மை அல்லது சிவப்பு நிறமுள்ள நூல், பானையின் மேலிருந்து கீழாக நுணுக்கமாக சுற்றப்படும். பானையின் மேல் புறத்தில் அழகான வடிவங்கள் குங்குமத்தால் வரையப்படும். இவ்வாறு சகல அலங்கார அமைப்புடனும் உள்ள பாத்திரம் பூரண கும்பம் என்று அழைக்கப்படுகிறது.

Image result for பூரண கலச சின்னம்:

 

ஹம்ஸா:

கண் திருஷ்டி என்பது, பல காலமாக மனித சமூகத்தின் பல்வேறு வீழ்ச்சிகளுக்கு காரணமாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இன்றைய நாகரிக உலகிலும் கூட, சாதாரண பெட்டிக்கடை முதல், பெரும் தொழில் நிறுவனங்கள் வரை கண் திருஷ்டிக்கான பொருட்கள் அல்லது சின்னங்களைப் பயன் படுத்தி வருகின்றன. ஆன்மிக குறியீடாக உள்ள ஹம்சா என்று சொல்லப்படும் இந்தச் சின்னம் பல நாடுகளில் கண் திருஷ்டிக்கான பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

Image result for ஹம்ஸா:

 

Lord Krishna’s Dhasavatharam – Tanjore Painting

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *