கடன் மற்றும் கவலைகள் தீர எளிய பரிகாரங்கள்

கடன் மற்றும் கவலைகள் தீர எளிய பரிகாரங்களை நமக்கு முன்னோர்களும், சாஸ்திரங்களும் வழி காட்டிள்ளது.

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்கையில் வெற்றி பெற கடும் போராட்டம் நடத்தியே வெற்றி பெற வேண்டியுள்ளது. அதில் வெகு சிலரே எந்தவித கஷ்டமும் இன்றி வெற்றியை எளிதாக அடைந்துவிடுகின்றனர்.

ஆனால், பலரும் தங்களது வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியாமலும், அதே நேரத்தில் கீழ்நிலைக்கு சென்றுவிடுவோமோ என்ற அச்சத்திலேயே கால்ததை கழிப்பதை பார்க்க முடிகிறது. பலரது வாழ்விலும் பலவித கவலைகள். குறிப்பாக சிலருக்கு கடன் குரல்வலையை நெறிக்கும். அதே போல வேறு சிலருக்கு வேறு பல தடை தாமதம் போன்றவைகள் இருக்கும். இவைகளிடம் இருந்து தப்பிக்க சாஸ்திரங்களும், நமது முன்னோர்களும் எளிய பரிகாரங்களை வழிகாட்டியுள்ளனர்.

தானங்கள் கொடுப்தன் மூலம் நலல் பலன்கள் கிடைக்கும். இதோ அதன் விவரம்:-

 1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்
 2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்
 3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்
 4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்
 5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்
 6. நெய் தானம் தர நோயைப் போக்கும்
 7. பால் தானம் தர துக்கநிலை மாறும்
 8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்
 9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்
 10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்
 11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்
 12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்
 13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்
 14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்
 15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.

எனவே, இந்த தானங்களை செய்து நாம் வாழ்வில் நன்மை பெறலாம்.

 

Visit : tmpooja.com/info

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *