சனி பகவான் யாரை பிடிப்பார்…தப்பிப்பது எப்படி?

ஜாதக கிரக நிலை மாற்றங்கள் ஏற்படும் போது சனி பகவானால் பாதிக்கப்படுபவர்கள் பரிகாரதலங்களுக்கு சென்று துன்பங்களை குறைத்து கொள்கிறார்கள்.

இந்து மத நம்பிக்கைகளில் பக்தர்கள் அதிகம் பயப்படுவது சனி பகவானுக்கு மட்டுமே. ஜாதக கிரக நிலை மாற்றங்கள் ஏற்படும் போது சனி பகவானால் பாதிக்கப்பட்டு அதிக சிரமங்களுக்கு ஆளாகிறவர்கள் அதிகம் பேர். அப்படி பாதிக்கப்படும் போதெல்லாம் பல பரிகார தலங்களுக்கு சென்று துன்பங்களை குறைத்தும் கொள்கிறார்கள்.

சனி பகவானின் கருணை பார்வை ஓம் நமச்சிவாய எனும் நாமத்தை உச்சரிப்பவர்கள் மீது அதிகம் உள்ளது. சனிஸ்வரனால் எந்த துயரமும் ஓம் நமச்சிவாயா சொல்பவர்களை பாதிப்பதில்லை.

தினந்தோறும் காகத்திற்கு சாதம் படைப்பவர்களையும் நீத்தாருக்கான பித்ரு கடன்களை முறையாக செய்பவர்களையும் சனி பகவான் தொந்தரவு செய்வதில்லை. சனிக்கிழமை விரதமிருந்து, சுதர்சன எந்திர வழிபாடு செய்பவர்கள் மீதும் சனி பகவான் கருணை காட்டுகிறார். வலம்புரி சங்கு இருக்கின்ற வீடு மற்றும் சாலகிராமத்தை வைத்து பூஜை செய்பவர்களையும் சனி பகவான் அன்போடு ஆசிர்வதிக்கிறார்.

உலராத ஈரத் துணியை உடுத்துபவர்களை சனி உடனே பிடித்துக கொள்வார். அதே போல நனைந்தபடியே ஈரம் சொட்ட சொட்ட வீட்டிற்குள் செல்பவர்களையும் சட்டென்று சனி பிடித்துக் கொள்வார்.

சரியாக குளிக்காமல் அசுத்தமாக இருப்பவர்கள், ஒழுங்காக தலைசீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்கள் இவர்களெல்லாம் சனிக்கு பிடித்தவர்கள்.

விளக்கேற்றப்படாமல் இருள் சூழ்ந்த இடங்கள், எப்போதும் அமங்கல சொற்களை பேசுவது இதெல்லாம் சனி பகவானுக்கு பிடித்தமானவை. இதை செய்பவர்களை நிச்சயம் பிடித்தும் கொள்கிறார் சனி.

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை இவற்றினால் அடுத்தவர்களை வஞ்சிப்பவர்களை தலைமுறை தலைமுறையாக தண்டித்து விடுகிறார் சனி பகவான்.

அழுகுரல் கேட்கும் வீட்டிலும், அழுக்குகள் நிறைந்த வீட்டிலும் சனி பகவான் நீங்காமல் நிலைத்து நிரந்தரமாக குடியிருக்கிறார்.

தூய்மையான உள்ளமும், குடியிருக்கும் சுத்தம் மிகுந்த வீடும், பிறருக்கு துயரம் தராத குணமும், தளராத இறை நம்பிக்கையும் சனி பகவான் கொடுக்கும் நன்மைகளை நமக்கு அளிக்கும். 

சனி பகவான் நம்மை கெடுக்காமல் இருக்க நமச்சிவாய சொல்லி நல்லதே நினைத்து நன்மைகள் பல செய்வோம்.

 

Vettiver Bath Scrub

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *