நீங்கள் காணும் கனவுகளின் பலன்கள்

மனிதர்கள் அனைவருக்குமே கனவுகள் தோன்றுகின்றன. கனவுகள் பற்றி இதுவரை எத்தனையோ விஷயங்களை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். கனவுகளுக்கும், நமது வாழ்க்கைக்கும் சில தொடர்புகள் இருப்பதை நாம் பல நேரங்களில் அனுபவப் பூர்வமாக உணர்ந்துள்ளோம்.

அந்த வகையில், கனவுகள் தோன்றுவதற்கும், அதற்கு உள்ள தொடர்பு குறித்தும் இங்கே காணலாம்..

கனவில் ஆலயம் தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் செய்யும் தொழில் வளர்ந்தோங்கும்: தருமப் பணியால் புகழ் உண்டாகும். தெய்வத் திருவுருவம் இல்லாத ஆலயம், அல்லது பாழடைந்த ஆலயம் கனவில் தோன்றினால் தொழில் நலிவடையும். புகழ் கெடும்.

ஆலயத்துக்குள் சென்று இறைவனை வழிபடுவது போன்று கனவு தோன்றினால் எடுத்த காரியம் இனிதே நிறைவேறும்.

கனவில் அரண்மனையைக் கண்டால் அது நல்ல பலனைத் தரும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார். பூர்வீக சொத்து வந்து சேரும். பரிசுகளை வெல்வார்கள். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.

அடுக்கடுக்காய் வழை இலைகளை கனவில் கண்டால் அடுத்து வரும் நாட்களில் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும். தான் வாய்விட்டு அழுது கொண்டிருப்பது போல் கனவு தோன்றினால் எதிர்கால வாழ்க்கையில் இடையூறுகள் உண்டாகும்.

தன்னை அலங்கரித்துக் கொள்வது போலக் கனவு கண்டால் அவ்வாறு கனவு கண்டவர் செய்யும் தொழிலில் நட்டம் ஏற்படும். தன்னைப் பிறர் அலங்கரிப்பது போலக் கனவு கண்டால் நண்பரால் நம்பிக்கை மோசடிக்கு ஆளாக நேரிடும்.

பிறரை அவமரியதை செய்வது போலக் கனவு கண்டால் கைகூடாமல் இருந்த காரியங்கள் இனி கைகூடிவரும். தன்னைப் பிறர் அவமரியாதை செய்வது போலக் கனவு கண்டால், சிறி சிறு தொல்லைகளும், துன்பங்களும் வரக்கூடும். தான் பெரியோர்களை அவமரியாதை செய்வது போலக் கனவு கண்டால், அவ்வாறு கண்டவரது முதலுக்கு மோசம் வரும்.

பச்சைக் கிளி கனவில் வந்தால், புதிய நட்பு கிடைக்கும் என்றும், பச்சைக் கிளி பறப்பது போல கனவு கண்டால், வாழ்கையில் முன்னேற்றம் என்றும் நம்பப்படுகிறது.

 

Visit : tmpooja.com/info

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *