மனிதர்களை பீடிக்கும் சனி என்னென்ன?

பொதுவாக ஒருவரது வாழ்நாளில் நான்கு முறை ஏழரைச் சனி வரும். இந்த சனியை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஏழரைச் சனி:– பொதுவாக ஒருவரது வாழ்நாளில் நான்கு முறை ஏழரைச் சனி வரும். ஒரு மனிதனுடைய வாழ்நாள் நான்கு முப்பது ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது 120 ஆண்டுகள். ஜென்மசனியின் காலத்தில் பிறந்தவர்கள் 60 வயதில் மூன்றாவது சுற்றை கடந்து விடுவார்கள். இதில் சிலர் மரணத்தையும், சிலர் நீண்ட ஆயுளையும் பெறுவார்கள்.

மங்கு சனி:– இளம் பருவத்தில் எதையும் தாங்கி கொள்ளக்கூடிய சூழ்நிலையில் சனிபகவான் தரும் சாட்டையடி சற்று மெதுவாகவே விழும். இந்த முதல் சுற்றுக்கு மங்கு சனி என்று பெயர்.
பொங்கு சனி:- வாலிபத்தின் நடுவில் வரும் இரண்டாவது சுற்று பொங்கு சனி ஆகும். ஜாதகரின் இதர கிரக அமைப்புகளை பொறுத்து இதன் ஆட்சி அவ்வளவு கடுமையாக இல்லாமல் சற்று கூடக்குறைய அடி விழும். ஒரு சிலருக்கு பொங்கு சனி விடைபெறும்போது மங்காத செல்வத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளி கொடுத்து விட்டு செல்லும்.
தங்கு சனி:- பொதுவாக 60 வயதை கடந்தவர்கள் இந்த தங்கு சனியின் அருள்பார்வையுடன் மூன்றாம் சுற்று ஏழரைச் சனியை சந்திப்பார்கள். இந்த தங்கு சனி தகுந்த செல்வம், உற்றார், உறவினர்கள், பேரன், பேத்திகள், நண்பர்களுடன் சேர்ந்து தங்கி மகிழ்ந்திருக்க வேண்டிய காலம். ஆயுள்காரகனின் அருள் இருந்தால் ஆனந்தமாக தங்கு சனியை தடையின்றி கடந்து விடலாம்.
மரணச்சனி:- ஒருவனுடைய வாழ்நாளில் நல்லது கெட்டது என்று பலவற்றையும் அனுபவித்து நான்காவது சுற்றாக சுமார் 90 மற்றும் அதற்கு மேலும் வயதை கொண்டுள்ள வயோதிக காலத்தில் மரணச்சனியின் காலம் உருவாகும். அந்த மரணச்சனியுடன் பூலோக வாழ்க்கை முடிவடைந்து இறைவனை சரணாகதி அடைவார்கள்.
http://tmpooja.com/shop/pooja-vastram-cotton-vastram/pooja-vastram-white-color-7/

Leave a Reply