ராகு, கேதுவுக்கு பரிகாரம் செய்வது எப்படி? நடைமுறைப் பரிகாரங்கள் உள்ளதா?

திருநாகேஸ்வரம், கீழப்பெரும் பள்ளம் ஆகிய ராகு, கேது ஸ்தலங்களிலும், காளஹஸ்தி போன்ற சிறப்பு பெற்ற கோயில்களிலும் பரிகார பூஜைகள் நடத்தப்படுகிறது.

இது ஒருபுறம் இருந்தாலும், ராகு, கேது தோஷம் அல்லது ஆதிக்கம் உள்ளவர்கள் நடைமுறைப் பரிகாரங்களை மேற்கொள்வதன் மூலம் நல்ல பலனைப் பெற முடியும்.

தாரணமாக, ஒருவர் ராகு, கேதுவின் ஆதிக்கத்தில் இருந்தாலும் அல்லது அவரது ஜாதகத்தில் ராகு/கேது ஒட்டுமொத்தமாக ஆதிக்கம் செய்தாலும், ஏற்கனவே மணமுறிவு பெற்றவர்களை (ராகு ஆதிக்கம்) திருமணம் செய்து கொள்ளுங்கள் . இதேபோல் ஊனமுற்றவர்களுக்கும் உதவுங்கள்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சிவன் உள்ளிட்ட (பாம்பு தொடர்பான) கோயில்களிலுக்கு சென்று வழிபாடும் மேற்கொள்ளலாம். நவகிரகத்தில் உள்ள ராகு/கேதுவுக்கும் விளக்கேற்றலாம்.

ஜோதிடத்தில் கேது ஞானக்காரகன் என்று அழைக்கப்படுகிறார். அவரது ஆதிக்கம் பெற்றவர்கள் அல்லது தோஷம் பெற்றவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள், மனவளம் குன்றியவர்களுக்கு உதவலாம். பள்ளிப் பாடம் நடத்திய ஆசிரியருக்கு உதவலாம். பழைய பள்ளிக்கூடங்களைப் புதுப்பிக்க உதவலாம். பணம் செலுத்த முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்களின் படிப்புக்கு பொறுப்பேற்கலாம்.

 

 

Visit : tmpooja.com/info

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *