நவகிரகங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் யாது?

ஆதி காலங்களில் அதாவது கி.மு. காலகட்டத்தில் அமைந்த கோயில்களில் நவகிரக வழிபாடு கிடையாது. கி.பி. காலகட்டத்தில்தான் – 4வது நூற்றாண்டுக்கு பிறகு, ராஜராஜ சோழனின் வருகைக்கு பின்னரே நவகிரக வழிபாடு ஏற்பட்டுள்ளது.

பல கோயில்களில் பிற்காலங்களிலேயே நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது வரலாற்றின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தீவிர இறை நெறியாளர்கள் சிவனை ஆதியும், அந்தமுமாக வழிபடுபவர்கள், நவகிரக வழிபாட்டை கடைபிடிப்பதில்லை. சிவனைத் தாண்டி என்ன நடந்து விடப்போகிறது என்ற எண்ணமே இதற்கு காரணம். நாளென்ன செய்யும் கோள் என்ன செய்யும் என்ற திருக்கோளர் பதிகம் பாடலின் பொருள் இதுதான்.

நவகிரகங்கள் என்பது இறைத் தூதர்களாக கருதப்படுகின்றனர். இறை-ஏவல் ஆட்கள் என்றும் கூறலாம். அதாவது இறைவன் நினைத்ததை, அவரது உத்தரவை நிறைவேற்றும் ஊழியர்கள்.

இதன் காரணமாகவே மூலவரை வணங்கினால், அவரது ஊழியர்களால் நம்மை எதுவும் செய்ய முடியாது என்பது தீவிர இறை நெறியாளர்கள், சைவப் பிரியர்கள், அடியார்களின் தீர்க்கமான கருத்து.

ஆனால் மற்றொரு பிரிவினர் இறைவனுக்கே நேரம் காலம் உண்டு என்று நம்புகிறார்கள். உதாரணத்திற்கு, திருவண்ணாமலை போன்ற கோயில்களிலுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு செல்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால் அக்கோயில் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், அந்த கோயிலுக்கு செல்பவர்களின் வருகை அதிகரித்துள்ளது.

Navagraha Homam Pooja Kit

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *