வீடு கட்டும்போது கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து முறைகள்!

தெற்கை விட வடக்கிலும், மேற்கை விட கிழக்கிலும் அதிக காலியிடம் விட்டு வீடு கட்டினால் செல்வம் பெருகும், வியாபாரம்  விருத்தி அடையும், குழந்தைகளால் புகழ் மேலோங்கும்.

வடக்கு, கிழக்கு, வடகிழக்கு போன்ற திசை மாடியில் நீர்த்தொட்டி அமைப்பது உடல் ஆரோக்கியம் பெருக செய்யும்.

வடக்கு, வடமேற்கு பகுதியிலோ அல்லது வீட்டில் அடுத்து வட கிழக்கிலோ தொழுவம் அமைப்பது நல்லது. வடக்கு, கிழக்கு  பகுதியில் விலைக்கு வரும் பூமியை வாங்கலாம். தெற்கு, மேற்கு பகுதியை தவிர்க்கவும்.

தலைவாசலுக்கு குத்தல் வருவது போல் குளியலறை, கழிப்பறை அமைக்கக்கூடாது.

எப்படிப்பட்ட வீடாக இருந்தாலும் நடைப்பாதையில் கழிவறை அமைக்கக்கூடாது.

வீட்டுத் தாழ்வாரம் வீட்டை விட உயரமாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வீட்டில் ஒற்றை தாழ்வாரம் அமைத்து, சுற்றிலும் சுவர் வைத்து, வாயில் விடுவது நல்லதல்ல, இதனால் வம்சவளர்ச்சி  குறைபாடு ஏற்படலாம்.

சமையல் அறைக்கு முன்னால் வடக்கு, அல்லது கிழக்கில் கழிப்பறை, குளியலறை அமைப்பதை தவிர்க்கவும். இது  பெண்களுக்கு உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

தெருவின் மட்டத்திற்கு தாழ்ந்த மனையில் வசிப்பது செல்வதை குறைத்து நோய் ஏற்படுத்தும்.

 

Vasthu Boomi Pooja Kit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *