ஆன்மிகமும் அறிவியலும் – அரசமரம்

நம் முன்னோர்கள் மரங்களை வழிபட்டு வந்ததை பல வரலாற்று சான்று கொண்டு அறியலாம்.அந்த மரபு இன்றும் நம்மிடையே தொடர்ந்து கொண்டிருக்கிறது.இவ்வாறான மரங்களில் மிகவும் தொன்மை வாய்ந்ததும் பல மருத்துவ குணங்கள் கொண்டது அரச மரம். மரங்களின் அரசனாக கருதப்படும் இந்த அரச மரத்தின் வேர் பகுதி பிரம்மாவையும் நடுபகுதி திருமாலும்,உச்சியில் ஈசனும் அருள்புரிவதாக புராணங்கள் கூறுகின்றன.

இத்தனை சிறப்பு கொண்ட அரச மரத்தை சுற்றி வந்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.இது ஒர் ஆன்மிக நம்பிக்கையாக இருந்தாலும் இதற்க்கு பின்னால் பெரும் அறிவியல் ஒளிந்திருக்கிறது.அரச மரம் அதிகபடியான பிராணவாயுவை வெளியிடுகிறது. இந்த சுத்தமான ஆற்றல் மிக்க பிராணவாயுவை ,பெண்கள் சுவாசிக்கும் போது கருப்பை சம்மந்தமான பிரச்சனைகள் சீரடைந்து ,சுரபிகள் செயல்பாடு தூண்டிவிடப்படுகிறது.

இதனால் குழந்தை இல்லாமல் தவிக்கும் பெண்கள் கருவுற வாய்புள்ளது , என்பதை ஆராய்ச்சி மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.ஆனால் இந்த உண்மையை நமது முன்னோர் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஆன்மிகம் வாயிலாக கூறியிருக்கின்றனர்.ஆன்மிகம் என்பது அறிவியலையும் ஆரோக்கியத்தையும் உள்ளடக்கியது என்பது அரச மரத்தின் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

 

Banana Stem Wicks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *