எதற்காக திருமணத்தின் போது அட்சதை துவப்படுகின்றது ..

பொதுவாக திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளின் போதும், வேறு சில சுப நிகழ்ச்சிகளின் போதும் பெரியோர்கள் தங்கள் வீட்டில் உள்ள பிள்ளைகளை அட்சதை தூவி ஆசிர்வதிப்பது வழக்கம். இந்த அட்சதையில் இருக்கும் முக்கிய பொருட்கள் மஞ்சள், அரிசி மற்றும் பசு நெய். இவை மூன்றையும் சேர்த்து அட்சதையை உருவாக்குவதற்கு பின் ஒரு தத்துவம் ஒளிந்துள்ளதை.

அரிசி என்பது பூமிக்கு மேல் விளைவது. மஞ்சள் பூமிக்கு வீழ் விளைவது. இவை இரண்டையும் இணைக்கும் ஒரு இணைப்பானாக பசு நெய் செயல்படுகிறது. அரிசியும் மஞ்சளும் எப்படி முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலையில் வளர்ந்தாலும் பசு நெய்யால் ஒன்றுபடுகிறதோ. அது போல மணமக்கள் இருவரும் வெவ்வேறு சூழ்நிலையில் அதுவரை வாழ்ந்திருந்தாலும் திருமண பந்தத்தின் மூலமாக அவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்னும் அற்புதமான தத்துவத்தை இது உணர்த்துகிறது.

atchathai-wedding

திருமணத்தில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மணமக்களை அட்சதை தூவி ஆசிர்வதிப்பதற்கு பதிலாக தனித் தனியாக மணமக்களின் அருகில் சென்று அட்சதை தூவி ஆசிர்வதிப்பதே சிறந்த ஆசீர்வாதமாக கருதப்படுகிறது.

இதே போல வீட்டில் நடக்கும் சிறு வேஷஷங்களிலும் புதுமனை கட்டும்போதும், புதிய தொழில் துவங்கும்போதும் அட்சதை தூவி ஆசீர்வதிப்பதுண்டு. பொதுவாக அரிசிக்கு சந்திர சக்தி அதிகம், மஞ்சளுக்கு குருபகவானின் சக்தி அதிகம், பசு நெய்க்கு மகாலட்சுமியின் சக்தி அதிகம். ஆகையால் இவை மூன்றையும் கலந்து ஆசிர்வதிப்பதன் மூலம் ஆசிர்வாதம் பெறுபவரின் வாழ்வு சுபிட்சமாக இருக்கும் என்பது ஐதீகம்.

கையை உயர்த்தி சாதாரணமாக ஆசீர்வாதம் செய்திருக்கலாம், ஆனால் அதற்குள் அட்சதை என்ற ஒன்றை புகுத்தி அதற்குள் ஒரு அற்புதமான தத்துவத்தை விளங்கச்செய்த நம் முன்னோர்களின் எல்லை இல்லா பண்பை என்ன வென்று வியப்பது.

 

Pooja Vastram – White Cotton Dhoti with Blue Border

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *