எந்த பூ எந்த கடவுளுக்கு உகந்தது? l

எப்படி மலர்களை சமர்ப்பிக்க வேண்டும் :

மலர்களை தெய்வத்திற்கு சமர்ப்பிக்கும் போது ஐந்து விரல்களையும் பயன்படுத்த வேண்டும். கடவுளின் பாதங்களில் மலர்களை சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் தினமும் மலர்களை கொண்டு பூஜிக்க நினைத்தால் மலர் செடிகளை வீட்டிலேயே வளர்த்து கொள்வது நல்லது. இதனால் உங்கள் கடவுள்களுக்கு தினமும் ப்ரஷ்ஷான மலர்களை சமர்ப்பிக்க இயலும். குளித்த பிறகு பூக்களை பறிக்க வேண்டும். கோயில் அருகில் உள்ள பூக்கடைகளில் கூட உங்கள் பூஜைக்காக மலர்களை வாங்கி கொள்ளலாம். ஏனெனில் அவர்களுக்கு தெரியும் எந்தெந்த தெய்வங்களுக்கு எந்தெந்த பூக்களை அர்ச்சிக்க வேண்டும் என்று.

ஒவ்வொரு தெய்வங்களுக்கும் உகந்த பூக்கள் :

கடவுள் விநாயகர் : சிவப்பு நிற மலர்கள் பிள்ளையாருக்கு விருப்பமான மலராகும். இருப்பினும் சிவப்பு நிற செம்பருத்தி பூ அவருக்கு ரெம்ப பிடிக்கும். செம்பருத்தி நிறைய வண்ணங்களில் காணப்படுகிறது. அதில் சிவப்பு நிறத்தை தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும் தாமரை, சாம்பா, ரோஜா, மல்லிகை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற சாமந்தி போன்றவற்றையும் சமர்ப்பிக்கலாம். இதைத் தவிர்த்து அருகம்புல் (1,3,5,7),வில்வ இலைகள் மற்றும் மூலிகை இலைகள் போன்றவற்றையும் கடவுள் விநாயகருக்கு படைக்கலாம். கணபதி பூஜை செய்யும் போது 21 விதமான மலர்கள் மற்றும் இலைகளை கொண்டு பூஜிக்கப்படுகிறது.

கடவுள் சிவ பெருமான் :

வெள்ளை நிற மலர்கள் இவருக்கு உகந்தது. மகிழம் பூ, நீல நிற தாமரை கிடைக்காவிட்டால் பிங்க் நிற தாமரை அல்லது வெள்ளை தாமரையை சமர்ப்பிக்கலாம், செவ்வரளி போன்றவற்றை கொண்டு பூஜிக்கலாம். வில்வ இலைகள் (9அல்லது 10), ஊமத்தம் பூ, நாகசேர் பூ, பாரி சாதம் மற்றும் எருக்கம் பூ போன்றவற்றை சமர்ப்பிக்கலாம். வில்வ இலைகள் சிவன் பூஜையில் கண்டிப்பாக இடம் பெறும் பொருளாகும். கம்பு தானியம் போன்றவையும் பயன்படுத்தப்படுகிறது. வில்வ இலைகள் பாதி பூச்சரிக்கப்பட்டு இருந்தால் அது பூஜைக்கு ஏற்றது அல்ல.

கடவுள் துர்கை :

சிவப்பு நிற மலர்களான செம்பருத்தி, தாமரை, குண்டு மல்லி மற்றும் வில்வ இலைகள் (1அல்லது 9) போன்றவற்றை கடவுள் துர்கை அம்மனுக்கு சமர்ப்பிக்கலாம்.

கடவுள் பார்வதி தேவி:

சிவனுக்கு படைக்கப்படும் எல்லா மலர்களும் அன்னை பார்வதி தேவிக்கும் அர்ச்சிக்கலாம். அதைத் தவிர வில்வ இலைகள், வெள்ளை தாமரை, புல் மலர், சாம்பா (சம்பங்கி பூ) , முட்கள் நிறைந்த பூக்கள், சாமலி வகை பூக்கள் போன்றவற்றை கொண்டு பூஜிக்கலாம்.

கடவுள் விஷ்ணு :

இவருக்கு தாமரை மலர் தான் மிகவும் பிடித்தது. பிங்க் நிற தாமரை, குண்டு மல்லி, மல்லிகை, சாமலி பூக்கள், சம்பங்கி பூ, வெள்ளை கதம்பு பூக்கள், கெவ்ரா பாசந்தி போன்றவற்றை கொண்டு அர்ச்சனை செய்யலாம். துளிசி இலைகள் அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். துளிசி இலைகள் (1,3,5,7,9)என்ற எண்ணிக்கையில் சமர்ப்பிக்கலாம்.

கடவுள் மகாலட்சுமி :

மகாலட்சுமிக்கு விருப்பமான மலர் தாமரை ஆகும். பிங்க் நிற தாமரை, மஞ்சள் சாமந்தி, நாட்டு ரோஜா வில்வ பழம் போன்றவற்றை கொண்டு அர்ச்சிக்கலாம்.

பூக்களை சமர்ப்பிக்கும் வழிமுறைகள் :

மாலை நேரத்தில் பூக்களை பறிக்க கூடாது. பூக்களை பறிக்கும் போது கண்டிப்பாக செடிக்கு நமது நன்றியை தெரிவிக்க வேண்டும். பூக்களை பறிக்கும் போது மந்திரம் ஓதிக் கொண்டு செய்வது நல்லது. நிலத்தில் உதிர்ந்த பூக்களை எடுக்க கூடாது நன்றாக ப்ரஷ்ஷாக இருக்கும் பூக்களை மட்டுமே பறிக்க வேண்டும். வாடிய தூசி படிந்த மலர்களை பறிக்க கூடாது. மலராத பூக்களையும் பறிக்க கூடாது. நன்றாக மலர்ந்த பூக்களை மட்டுமே பறித்து படைக்க வேண்டும்.

செய்யக் கூடாதவைகள் :

பூக்களின் மொட்டுகளை சமர்பிக்க கூடாது. ஆனால் சம்பங்கி பூ மற்றும் தாமரை மொட்டுகளை மட்டும் படைக்கலாம் திருடியோ அல்லது தானம் வாங்கியோ பூக்களை படைக்க கூடாது பூக்களை பறித்த பிறகு சுத்தமாக நீரில் கழுவிய பிறகே சமர்ப்பிக்க வேண்டும். நோய் வாய்ப்பட்ட பூக்கள், பூச்சிகளால் அரிக்கப்பட்ட பூக்கள் போன்றவற்றை படைக்க கூடாது துளிசி இலைகளை சங்கராந்தி மாலை நேரத்தில், தவசி (12வது), அமாவாசை, பவுர்ணமி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் மாலை நேரம் போன்ற நேரங்களில் பறிக்க கூடாது தாமரை 5 நாட்கள் வரை வாடாமல் அப்படியே இருக்கும். வில்வ இலைகள் கிடைக்காத சமயத்தில் ஏற்கனவே கடவுளுக்கு படைக்கப்பட்ட வில்வ இலைகளை கழுவி மீண்டும் பயன்படுத்தி கொள்ளலா.

VPC GINGELLY OIL 500 ml

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *