கிரக தோஷங்களை நீக்கி நன்மைகள் வழங்கும் ஸ்படிக லிங்கம்

Benefits : 

பல நுறு வருடங்களாக பூமிக்கு அடியில் தேங்கியுள்ள நீர் பாறையாக மாறும். அந்த பாறையில் இருந்து சுத்தமான கற்களை தேர்வு செய்து ஸ்படிக லிங்கம் செய்வார்கள். ஸ்படிக லிங்கம் என்பது பொதுவாக நீண்ட குச்சி போன்ற வடிவமும், சுமார் ஒரு  இன்ச்சிலிருந்து, பத்து இன்ச் வரை உயரமும் ஆறு முகங்கள் அல்லது பட்டைகள் உடையதாகவும் இருக்கும்.
இந்த ஸ்படிக லிங்கங்கள் அனைத்து கிரக தோஷங்களையும் மிக முக்கியமாக எதிர்மறை சக்திகளை விரட்டி அடிக்கும் மிகவும்  உன்னதமான ஒன்றாகும். இதன் தனிச் சிறப்பு ஒரு வினாடிக்கு, 32,768 தடவை நேர்மறையாக அதிரக்கூடிய தன்மை உடையது.
இந்த அதிர்வலைகள் நம்மை சுற்றி அரணாக நல்ல சக்திகளை பரப்புகிறது. இதனால் எவ்வித தோஷங்களாக இருந்தாலும்  தீர்த்து நன்மைகளே நடக்கின்றன. அதனால் தான் ஒரு ஸ்படிக லிங்கம் என்பது கருங்கற்களால் செய்யப்பட்ட ஆயிரம் லிங்கங்களுக்குச் சமம் என்று சொல்வார்
ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து வணங்குவதால் வீடு முழுமையும் நேர்மறை அதிர்வுகள் ஏற்படுகிறது. வீட்டை நெருங்கும் தீய சக்திகளை விரட்டி அடிக்கப்படுகிறது. தூய்மையான மனம், தெளிவான சிந்தனை ஆகியவை கிடைத்து உயர்வான வாழ்வு  அமைகிறது. நவக்கிரகங்களின் கெட்ட பலனை பெரிதும் அழிக்கும். ஸ்படிக லிங்கத்தின் முன் சிவனை மட்டும்தான் வழிபட  வேண்டும் என்றில்லை. லட்சுமியின் அருள் வேண்டி லட்சுமி தேவியையும் வணங்கலாம். இதனால் பொருள் வளம்  அதிகரிக்கும்.
சனிபெயர்ச்சி காலத்தில் உங்கள் வீடு, தொழில் நிறுவனங்களில் வைத்து வழிபடுவதால் உயர்ந்த நன்மைகள் நடைபெறும்.
http://tmpooja.com/shop/herbal-products-health-natural-remedies-organic-herbs-shop-medicines-online/amukkara-churanam/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *