குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா?

நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள்காரணம் தெரியாமலேயே மக்களால் பின்பற்றப்பட்டுவருகிறது. ஆனால் அப்படி பின்பற்றப்படும்பழக்கவழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை மறைந்திருக்கும்.முறையாக சொன்னால் யாரும் பின்பற்றமாட்டார்கள் என்று நம் முன்னோர்கள் செய்த வேலை தான் இது.

அதில் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது என்பது ஒன்று.பலரும் இது ஓர் குடும்ப வழக்கம், நேர்த்திக்கடன் என்று நினைத்து பின்பற்றி வருகிறார்கள். ஆனால் இதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா?

கருவறையில் 10 மாதம் பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கிறோம். இந்த கருவறையில் என்ன சந்தனமும், பன்னீருமா நம்மைச் சுற்றி இருக்கும். இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் நாம் இருப்போம்கடல் நீர் சாதாரணமாக கடல் நீரில் கை விரல்களை 5 நிமிடம் ஊற வைத்து, பின் அவற்றை நன்கு துடைத்துவிட்டு வாயில் வைத்தால் எப்படி உப்பு அப்படியே இருக்கிறது.

5 நிமிடம் ஊற வைத்த கை விரல்களிலேயே உப்பு இருக்கையில், 10 மாதம் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் இருந்த நம் உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.உடலினுள் சேரும் இந்த கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும். ஆனால் அதற்கான வழிகள் குறைவு.

அதற்காகத் தான் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போடுகின்றனர்.ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்இப்படி உண்மைக் காரணத்தைச் சொன்னால், பலரும் அலட்சியப்படுத்தி பின்பற்றமாட்டார்கள்.

எனவே தான் நேர்த்திக்கடன் என்ற பெயரில் நம் முன்னோர்களால் அது பரப்பப்பட்டது.சிலர் தங்கள் குழந்தைக்கு மூன்று வயதில் ஒரு மொட்டையைப் போடுவார்கள். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதற்காகத் தான்.நம் மக்களிடையே அறிவியல் ரீதியாக சொல்வதை விட, ஆன்மீக ரீதியாக சொன்னால், கட்டாயம் செய்வார்கள் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்துள்ளன.

Banana Stem Wicks

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *