கோயிலுக்குள் வலம் வரும்போது ஒவ்வொரு சந்நிதியிலும் கீழே விழுந்து (சாஷ்டாங்க நமஸ்காரம்) வணங்கக்கூடாது

தலை, இரு தோள்கள், மார்பு உட்பட வயிற்றுப்பகுதி, இரு கால்கள் , இரு பாதங்கள் ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் பதிய வணங்கும் முறை.ஆலயம் என்பது ஆன்மா இறைவனிடம் சேர்வதற்குரிய இடம்.ஆன்மாவின் ஆணவ மலம் அடங்குவதற்குரிய இடம் ஆலயம் என்றும் கொள்ளலாகும்.

பழத்தின் ரசம் போலவும், விறகில் தீ போலவும், எள்ளில் நெய் போலவும், பாலில் வெண்ணெய் போலவும் எங்கும் நீக்க மற நிறைந்து, மறைந்து நின்ற சிவ பரம்பொருள், ஆலயங்களில் தயிரில் நெய் போல் நின்று ஆன்மாக்களுக்கு அருள்புரிந்து இயங்குகின்றார்.

அன்பர்கள் எளிதில் இறைவனின் அருளைப் பெறும் இடங்களாகத் திகழ்வன சிவன் கோயில்.கோயிலுக்குள் வலம் வரும்போது ஒவ்வொரு சந்நிதியிலும் கைகூப்பி வணங்க வேண்டும். கீழே விழுந்து வணங்குவது கூடாது.கொடிமரத்தைத் தாண்டி வந்து மூலவருக்கு நேராக மட்டும் கீழே விழுந்து வணங்க வேண்டும்.

கிழக்கு, மேற்கு நோக்கிய கோயில்களில் வடக்கு நோக்கி தலை வைத்தும், வடக்கு, தெற்கு பார்த்த கோயில்களில் கிழக்கு நோக்கி தலை வைத்தும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

சிவனுக்குரிய ஸ்லோகம் ஒன்றில், சாஷ்டாங்க நமஸ்காரத்தால் இரு வித பாவங்கள் நிவர்த்தியாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. “ஒன்று போன பிறவியில் நமஸ்காரம் செய்யாதது, மற்றொன்று அடுத்த பிறவியில் நமஸ்காரம் பண்ணாமல் இருக்கப் போவது”

முற்பிறவியில் சிவனுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்திருந்தால், இந்த பிறவி நமக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இப்போது சிவனை வணங்கி விட்டதால் அடுத்த பிறவி எடுக்கவும் வாய்ப்பில்லை என்று அந்த ஸ்லோகத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

Brass Kalasam 500ml

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *