சிரிச்சா தப்பே இல்ல!

பயன்கள் :
*`வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்’ என்று கூறுவார்கள். இது எல்லோருக்கும் தெரிந்திருந்தும், சிலர் ஏனோ மருந்துக்குக் கூட சிரிப்பதே இல்லை.
*எப்போதும் மூஞ்சை `உம்’ என்றே வைத்துக் கொண்டிருப்பார்கள். அடிக்கடி சிரித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு நிறைய பலன்கம் கிடைக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.
* நாம் ஒவ்வொருவரும் உயிர்வாழ ஆக்சிஜன் இன்றியமையாதது. நாம் சிரிக்கும்போது அந்த ஆக்சிஜன் போதுமான அளவு உடலுக்கும் செல்கிறது. இதனால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
* சிரிப்பதால் தசைகளில் ஏற்படும் வலிகம் தவிர்க்கப்படும். மன அழுத்தமும் போக்கப்படுகிறது.
* சிரிப்பு, தகவல்களை உடனுக்குடன் உள்வாங்கிக் கொள்ளும் வகையில் செயல்பட மூளைக்கு உறுதுணை புரிகிறது
. * சிரிப்பு, சமூகத்தோடு ஒன்றி மகிழ்ச்சியுடன் வாழ வழிவகை செய்கிறது. உதாரணம் : அடிக்கடி நகைச்சுவைகளை அள்ளி விடுபவர்களை சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
* உடல் சோர்வு தவிர்க்கப்பட்டு, புத்துணர்வுடன் செயல்பட சிரிப்பு துணை புரிகிறது.
* எவ்வளவு கடினமான பணிகளை செய்தாலும் புதிய உத்வேகம் கிடைக்கும் வகையில் உடலுக்கும் தூண்டுதலை சிரிப்பு ஏற்படுத்துகிறது.
* ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது.
* இதயம் தொடர்பான நோய்கம் வருவதையும் சிரிப்பு தடுக்கிறது. இப்படி… சிரிப்பதால் கிடைக்கும் பலன்களை அடுக்கிக்கொண்டே போகிறார்கள் மருத்துவர்கள்.
*இந்த பலன்களை பெற உதடுகள் மட்டும் சிரித்தால் போதாது; தினமும் 15 முறை சிரிக்க வேண்டும்; அதுவும், வாய்விட்டு, வயிறு குலுங்க சிரிக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். நீங்களும் முயற்சித்து பாருங்களேன்…!
http://tmpooja.com/shop/herbal-products-health-natural-remedies-organic-herbs-shop-medicines-online/aloe-vera-k-p-namboodiris-herbal-tooth-paste-with-miswak/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *