சிவனருளை சீக்கிரம் தரும் மஹாவில்வம்!!!

உலகின் ஒரே கடவுள் என்பது ஈசன் என்ற அண்ணாமலையார் தான்;அவருக்கு கோடிப் பெயர்கள்;லட்சம் உருவங்கள்! ஆயிரக்கணக்கான கடவுள் தன்மைகள்!!!

சராசரி மனிதர்களாகிய நாம் பிறவிகளின் எண்ணிக்கையைக் குறைத்து,சிவனோடு கரைய ஐந்து அருட்சாதனங்களை நாயன்மார்கள் உணர்த்தியிருக்கின்றனர்;

1.சிவலிங்கம்

2.விபூதி

3.ருத்ராட்சம்

4.வில்வம்

5.சிவனடியாராக ஆகுதல்

இதில் வில்வத்தைப் பற்றி ஒரு நாளுக்கு மூன்று மணி நேரம் வீதம் 30 நாட்களுக்கு ஆன்மீகப் பயிற்சி வகுப்பே எடுக்கலாம்;அவ்வளவு சிவரகசியங்கள் எம்மிடம் இருக்கின்றன;இருப்பினும் சுருக்கமாக!

வில்வத்தில் 12 ரகங்கள் இருக்கின்றன;அவைகளில் மிகவும் முக்கியமானது வில்வம்,மஹாவில்வம்,காசி வில்வம் மற்றும் சில வில்வங்கள்;

இதில் மஹாவில்வத்தை கோவில்,ஆசிரமம்,சிவசமாதி(ஜீவசமாதியின் நிஜப் பெயர்) போன்ற இடங்களில் மட்டுமே வளர்க்க வேண்டும்;(எக்காரணம் கொண்டும் வீட்டில்,வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கக் கூடாது)மஹாவில்வத்தில் இலைகள் ஒரு காம்பில் ஏழு,ஒன்பது,பனிரெண்டாக இருக்கும்;

மேலும் வில்வக் கன்றுகளை நட்டுவிட்டு அப்படியே போய்விடவும் கூடாது;நட்ட நாள் முதல் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் வரை தினமும் நீர் ஊற்றி வளர்க்க வேண்டும்;இப்படிச் செய்வதால்,வளர்த்தவரின் 108 தலைமுறையினரின் அனைத்து சாபங்கள்,கர்மவினைகளையும் வாங்கி அந்த வம்சாவழியையே ஆத்ம சுத்தமாக்கும் ஆற்றல் மஹாவில்வத்திற்கு உண்டு;

நர்சரிகளில் இதை வளர்ப்பதற்கு பூர்வ புண்ணியம் வேண்டும்;ஏன் எனில், மஹாவில்வத்தில் விளையும் வில்வப் பழம் மிளகின் பாதி அளவே இருக்கும்;இதில் 2000 வில்வப் பழங்களை எடுத்து,அதன் விதையை முறைப்படி பக்குவப்படுத்தி செடியாக வளர்க்க முயன்றால்,15 முதல் 30 மட்டுமே வாழும்;அந்த 30 மஹாவில்வக் கன்றுகளையும் ஒரு அடி உயரத்திற்கு வளர்க்க குறைந்தது இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் ஆகும்;அதனால் தான் ஒரு மஹாவில்வத்தில் விலை சில நூறு ரூபாய்களுக்கு விற்பனைக்குக் கிடைக்கிறது.

மறு புறம் மஹாவில்வம் என்ற மரத் தொகுதியே அழிந்துவிட்டது என்ற கருத்து தென் மாநிலங்கள் முழுக்க பரவியிருக்கிறது.இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் சுமாராக 27,000 பழமையான சிவாலயங்கள் இருக்கின்றன;இவைகளில் 1000 சிவாலயங்களில் கூட மஹாவில்வம் இல்லை; என்றே தோன்றுகிறது.எனவே,சிவனை முழு முதற்கடவுளாகக் கொண்டவர்கள் வரும் ஆனி அமாவாசை நாள் அன்று(15.7.15 புதன்) திருவாதிரையும் அமாவாசையும் கூடி வருகிறது.நமது வீட்டிற்கு அருகில் இருக்கும் சிவாலயம் அல்லது ஆசிரமம் அல்லது குலதெய்வக் கோவில் அல்லது சிவசமாதி அல்லது பழமையான ஆலயத்தில் மஹாவில்வம் வளர்க்கத் துவங்குவோமா?

ஈசனின் ஜன்ம நட்சத்திரமாக அவரே தேர்வு செய்தது திருவாதிரை;அந்த நட்சத்திரத்தில் அமாவாசை அமைவது ஆனி மாதத்தில்!

வீட்டில் வில்வம் வளர்க்க விரும்புவோர் காசி வில்வம் வளர்க்கலாம்;வளர்த்து அதன் பழத்தில் இருந்து சாறு எடுத்து அருந்தலாம்;இதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு சிவ கடாட்சம் விரைவில் உண்டாகும் என்பது கடந்த ஏழு ஆண்டுகளாக பரீட்சித்துப் பார்த்த அனுபவ உண்மை;காசிவில்வச் சாறு தினமும் அருந்தி வந்து தினமும் சிவனை வழிபட என்னென்னமோ அதிசயங்களை உணர முடிகிறது;

ஒம் சிவாய நம

ஒம் சிவாய சிவ

ஒம் ஆம் ஹெளம் செள

Black Rudhraksha mala -4 dm size

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *