திரூமூலர் கூறும் லிங்க வகைகள்

திரூமூலர் கூறும் லிங்க வகைகள்:

 

அண்ட லிங்கம்
அண்டம் என்றால் உலகம். லிங்கம் என்பது அடையாளம். அண்டலிங்கம் என்பது உலகமே சிவனது அடையாளம் என்பதே.  உலகினைப் படைக்க விரும்பிய சதாசிவம் தன்னை விட்டு நீங்காத சக்தியின் துணை கொண்டு உலகத்தைத் உற்பத்தி  செய்தான். குண்டலினி சக்தியின் ஆற்றலால் உலகம் உருவமாகக் காட்சியளிக்கிறது.
சிவசக்தியினாலேயே அவை உலகில் வெவ்வேறு அறிவுடையனவாகக் காணப் பெறுகின்றன. இறைவனது திருவடிகள் கீழுலகமாகும். திருமுடி ஆகாயத்திற்கு அப்பாற்பட்டதாகும். திருமேனி ஆகாயமாகும். இதுதான் சிவபெருமான் உலகமே  உருவமாகக் கொண்ட திருக்கோலமாகும்
பிண்ட லிங்கம்
 மனித உடலையே சிவலிங்க வடிவமாகக் காண்பது பிண்ட லிங்கம். மக்களின் உடலமைப்பே சிவலிங்கம், சிதம்பரம், சதாசிவம், அருட்பெருங்கூத்து ஆகியவைகளாக அமைந்திருக்கின்றன.
 பிண்டத்தை  சிவலிங்கமாகக் காண்பது இவ்வுடலைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
சதாசிவ லிங்கம்
லிங்கத்தைச் சக்தியும் சிவமும் இணைந்த உருவமாகக் காண்பது.சக்தியின் வடிவமே சிவனது வடிவமாகும்.
சதாசிவம் உருவமும் அருவமுமாக இருந்து உயிருக்கு உதவி செய்யும்.சதாசிவ இலிங்கம் சிவமும் சக்தியும் பிரிப்பற்றது என்ற உண்மையை உணர்த்துகிறது.
ஆத்ம லிங்கம்

அனைத்து உயிர்களையும் இறைவனாகக் காண்பது ஆத்ம லிங்கம் எனப்படுகிறது. இறைவன் உயிருக்குள் உயிராக இருக்கும் நிலை. நாதமும் விந்துவும் கலத்தலே ஆன்மலிங்கம் (திருமந்திரம் 1954) என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.

திருமூலர் முதலிய தவயோகியர் சிவலிங்க வடிவங்களைப் பீடமும் லிங்கமுமாக வைத்து பீடத்தை விந்து வடிவம் எனவும் லிங்கத்தை நாத வடிவம் எனவும் உணர்த்தியுள்ளனர்.

நாதம் என்பது முதல்வனது ஞானசக்தி நோக்கத்தினால் சுத்த மாயையில் நேர்க்கோட்டு வடிவில் மேலும் கீழுமாக எழும் ஒரு அசைவைக் குறிக்கும். இவ்விரண்டு அசைவும் முறையே முதல்வனது ஞானசக்தியினாலும், கிரியா சக்தியினாலும் விளைவனவாகச் சிவசக்திகளது சேர்க்கையை உணர்த்தும் என பெரியோர்கள் கருதுகின்றனர். இவ்விரு அலைகளும் இணைந்தும், பிணைந்தும், மாறுபட்டும் உலகப் பொருட்களின் தோற்றத்தையும், வளர்ச்சியையும், தேய்ந்து மாய்தலையும் உண்டாக்குகின்றன என்கின்றனர்.

ஞான லிங்கம்

உள்ளம், உரை, செயலைக் கடந்து நிற்கும் இறைவனின் நிலை உணர்தல். இது இறைவனின் சொரூப நிலையை உணர்த்தும்.

சிவலிங்கம்

அனைத்துமாக விளங்கும் சிவனை ஒரு குறியின் இடமாக எழுந்தருளச் செய்தும் வணங்கும் முறையை உணர்த்துகிறது.

அடையாளமும், உருவமும் இல்லாத ஒன்றை உயிர்கள் மனத்தால் நினைக்கவோ வழிபடவோ முடியாது.

பக்குவமில்லாத உயிர்களுக்கு மனத்தை ஒருமுகப்படுத்தித் தியானம் செய்ய முதனையாக இறைவனை உணர்த்தும் ஒரு அடையாளம் தேவையாக இருக்கிறது.

Brass Lingam

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *