பிரம்மதேவரின் மூன்று உபதேசங்கள்

யஜுர்வேதத்தின் மிகப் பழைமையான பிருகதாரண்யக உபநிடதத்தில் பிரம்மதேவர் மனிதர்களுக்காக அளித்த மூன்று உபதேசங்கள் உள்ளன. அவை:

1) தமம் – தன்னடக்கம்
2) தானம் – தானம்/ஈகை
3) தயை – கருணை

அவாவை அடக்கி, தன்னடக்கத்தோடு வாழவும்; பேராசையை விடுத்து, நம் தேவைக்கு அதிகமாக இருப்பதை தேவைபடுவோருக்கு அளித்தும்; கோபத்தை தவிர்த்து எல்லோரிடமும் கருணையோடும் அன்போடும் நடந்தும் கொள்ள வேண்டும்.

இந்த மூன்று மேன்மையான குணங்களைக் கடைப்பிடித்து வாழும் மனிதர்கள், பிரம்மதேவரின் திருவருளைப் பெறுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *