பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்ன?

பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது?

பிரம்மன் என்பவர் உயிரை படைப்பவர் ஆவார்.இந்த பூமியில் இருக்கும் ஒருஉயிரானது படைத்த கடவுளாலே எடுத்துகொள்ளவேண்டும்.அப்படியில்லாமல் ஒருஉயிருக்கு தீங்கு விளைவித்தாலோ,பாதிப்பை ஏற்படுத்தினாலோ,உயிரைஎடுத்தாலோ உருவாகும் தோசமே பிரம்மஹத்தி தோசமாகும்.
ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை கொலை செய்து விடுவதால் , ஒருவருக்கு இந்ததோஷம் ஏற்படுகிறது. கொலை அல்லது அதற்கு சமமான பாவங்கள் :
1.பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்குகொடுத்து, அவளை அனுப வித்து  , திருமணம் செய்யாமல் இருத்தல்

2.பலரின் உழைப்பை உறிஞ்சி,அதற்குரிய சம்பளம் தராமல் இருப்பது

3.குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது

4.குருவின் கொள்கைபிடிக்காமல் தானே குருவாக மாறுவது

5.வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றுவிடுவது
6.சென்ற பிறவிகளில்,ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல்
7.உங்கள் மீது தனக்கிருக்கும் ஆசையை வெளிப்படுத்தியும்,அந்த ஆசையைநிறைவேற்றாமலிருப்பது (ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும்)

பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்?

1.வருடக்கணக்கில் மனக்குழப்பம் இருக்கும்

2.தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும்

3.மருத்துவத்திற்குக்கட்டுப்படாத நோய் வரும்

4.தொழிலில் திடீர் சரிவு அல்லது வீழ்ச்சி ஏற்படும்

5.திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது

6.குழந்தைப்பாக்கியம் இல்லாமல் அல்லது தாமதம்

ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான், குருவுடன் இணைந்தாலோ , குரு பகவான் சனிபகவானுடன் இணைந்தாலோ , இந்த இரு கிரகங்களுக்கும் சார பரிவர்த்தனைஏற்பட்டாலோ,சப்தம பார்வை பெற்றாலோ அவர் பிரம்மஹத்தி தோஷத்தைஅடைந்துள்ளார் என்பதை அறிந்துகொள்ளலாம்.ஒருவரின் உயிரை எடுத்தால் மனம்என்ன பாடுபடுமோ அதேபோல் இந்த தோசம் இருப்பவர்களின் மனமும் இருக்கும்.

இப்படிப்பட்ட தோஷம் உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாகஇருந்தாலும் சரி, அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. காலதாமதத்திருமணம், காலதாமத புத்திர பாக்கியம், தீராத கடன் தொல்லை , கல்வித் தடை , சரியான வேலைவாய்ப்பின்மை, அலைந்து திரிந்து கடுமையாக உழைத்தாலும்போதிய சம்பளம் கிடைக்காத நிலை ,கனவுத் தொல்லைகள்,தாங்கள் நடத்திவரும்தொழிலுக்கு வேலைக்காரர்கள் கிடைக்காத நிலை போன்ற பல குழப்பங்கள் இருந்துவரும்.

பரிகாரம்  :

சம்பந்தப்பட்ட ஜாதகர் எந்த தசா புக்தியில் பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளானார் என்பதை முதலில் பார்க்க வேண்டும். 6ஆம் அதிபதியின் தசையில் அந்த நிலை ஏற்பட்டதா? அல்லது 8க்கு உரியவனின் தசையில், 6ஆம் அதிபதியின் புக்தியில் அது நிகழ்கிறதா? என்பதைப் பொறுத்து பரிகாரம் மேற்கொள்ள வேண்டும்.
ஸ்ரீராமபிரானுக்கே பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.சிவ பக்தரான ராவணனைகொன்றதால் இந்த தோசம் ஏற்பட்டது.ராமர் வணங்கிய தேவிபட்டிணம் சென்றால்தோசம் விலகும்.ராமேஸ்வரம் சென்று வந்தாலும் தோசம் விலகும்.

இன்னொரு எளிமையான பரிகாரமும் செய்யலாம்.அமாவாசை தினத்தன்று, மாலை 5 மணிக்கு சிவன் கோவிலுக்கு சென்று, ஒன்பது சுற்றுகள் சுற்றிவந்துவணங்கிவரவேண்டும். இதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றிவந்துவணங்கி,சிவனுக்கு மூன்று அகல்விளக்கு ஏற்றி,அர்ச்சனையும்,அபிஷேகம் செய்துவந்தால் சிவபெருமான் அருள்பாலித்து, பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவார்.

tm-pooja-dhosam-marketed-by-kalpatharu-inc-divine

தமிழ்நாடு,கும்பகோணம் அருகில் இருக்கும் திருவிடைமருதூர் கோவிலுக்குச் சென்று , பிரம்மஹத்தி தோஷ நிவாரணம் செய்து , ஒரு வாசல் வழியே நுழைந்து வேறொரு வாசல் வழியேவெளியேறுதல். அங்கே அதற்குரிய யாகம் நடத்துதல்.

tm-pooja-dhosam-marketed-by-kalpatharu-inc-divine (3)
பொதுவாக பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் மேற்கொள்ள விரும்புபவர்கள், குலதெய்வத்தை முதலில் வணங்கி விட்டு, ராமேஸ்வரம், காசி, கயா, கங்கை உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் நீராடி, இறைவனை வணங்கி, பிண்டங்களை அளித்தால் பலன் பெறலாம்.

tm-pooja-dhosam-marketed-by-kalpatharu-inc-divine (5)

ஆனால் அடுத்தடுத்து பிரம்மஹத்தி தோஷம் ஏற்படாமல் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். பரிகாரம் இருக்கிறது என்பதால் எத்தனை முறை வேண்டுமானாலும் அதனை செய்து கொள்ளலாம் என பொருள் கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் அந்த பாவங்களுக்கு உண்டான பலனை அனுபவித்தாக நேரிடும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *