பைரவர் பற்றிய ஆன்மிக தகவல்கள்

பைரவ தீபம் :

பைரவப் பெருமானுக்கு சிறு துணியில் மிளகை சிறு மூட்டையாகக் கட்டி நல்லெண்ணை அகல் தீபத்தை ஏற்றி வழிபட எல்லா வளமும் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம். அதேபோல் பூசணிக்காயை மத்தியில் இரண்டாகப் பிளந்து அதனுள் எண்ணை அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம்.

சந்தன காப்பு அபிஷேகம் :

பைரவ மூர்த்திக்குப் பிடித்தமானது சந்தன காப்பு. இதில் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்த்து சந்தனகாப்பு செய்து வழிபடுவது என்பது தேவர்களின் ஆண்டுக்கணக்கில் ஒரு கோடி ஆண்டு பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறது. பால், தேன், பன்னீர், பழரசம் அபிஷேகமும் மிக விசேஷம்.

பிடித்த உணவுப்பொருட்கள் :

பைரவப் பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயாசம், அவல் பாயாசம் நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பல பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.

பிடித்த மாலைகள் :

பைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை அணிவித்து மல்லிகைப்பூ தவிர்த்து செவ்வரளி, மஞ்சள், செவந்தி மற்றும் வாசனை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது உத்தமம்.

ஸ்ரீ பைரவர் வாகனம் :

திருமாலை எட்டு இடங்களில் அவரின் உக்கிரத்தை தணிக்க உடலை 8 இடங் களில் ஸ்ரீ பைரவர் பிய்த்து எறிந்தார். இந்த எட்டு பிரிவும் எட்டு நாய்களாக வேதங்களாக மாறி பைரவரை வழிபடுவதாக உள்ளது.

நாய் நன்றி உள்ள பிராணி யாகும். நாய் ஒரு காவல் தெய்வமாகும். எமன் வரும் திக்கை முதன் முதலில் உணரும் சக்தி நாய்க்கு மட்டுமே உள்ளது. அதனால் தான் மனிதனின் உயிருக்கு பங்கம் விளைவிக்கும் கொள்ளையர்களையும், திருடர்களையும், அன்னியர்களையும் இரவு காலத்தில் அடையாளம் கண்டு கூறும் சக்தி நாய்க்கு மட்டுமே உள்ளது.

துப்பறியும் துறையிலும், கொலை, கொள்ளை குற்றங் களை கண்டுபிடிக்க நாய் பயன்படுத்துகின்றனர். வீட்டிற்கு காவலாக நாயை வளர்கின்றோம். எமபயமற்ற யோகசித்தி நாம் பெற வேண்டும் என்று உணர்த்து வதே நாய்களின் தோற்றப் படைப்பாகும்.

காஞ்சீபுரம் வைரவேச்சுரம் :

கண்டியூரில் பிரம்மனின் சிரத்தைக் கொய்த பாவம் தீர சிவ வழிபாடு செய்த பைரவரின் தனி ஆலயம் காஞ்சிபுரத்தில் உள்ளது. இதற்கு அருகிலேயே இந்தக் கால பைரவர் அஷ்ட பைரவராகி எட்டு வடிவங்களுடன் எட்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்ட வைரவேச்சுரம் என்ற சிவாலயமும் உள்ளது. இத்தலத்தின் உற்சவர் காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ளார்.

காஞ்சிக்குத் தென்மேற்கில் அழிப்படை தாங்கி என்னுமிடத்தில் பிரம்மதேவர் வழிபட்ட பைரவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரம்மன் சிவலிங்கத்தை வைத்து வழிபட்டதுடன் தனது ஐந்தாவது சிரத்தைக் கிள்ளிய பைரவருக்கும் தனி சந்நிதி அமைத்து வழிபாடு செய்தான்.

உருத்திரமேரூருக்கு அருகில் உள்ள சில மலைகளிலும், திருக்கழுக்குன்றத்திற்கு அருகிலுள்ள செம்பாக்கம் மலை மீதும் பைரவருக்கென தனி ஆலயங்கள் உள்ளன.

Cow

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *