விநாயகர் சிலையை ஏன் ஆற்றில் கரைக்க வேண்டும்

விநாயகர் சிலையை ஏன்  ஆற்றில் கரைக்கிறோம்????

விநாயகரை ஆதிகாலம் முதலே வணங்கி வந்தாலும் அதனை மக்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் பிரபலப்படுத்தியவர் பாலகங்காதர திலகர்.1893 ஆம் ஆண்டிலிருந்து விநாயகர் சதுர்த்தி என்ற விழா எடுத்து விமர்சையாக கொண்டாட வழிவகுத்தார். அவரது விருப்பப்படி முதன்முதலாக பூனாவில் உள்ள விநாயகர் கோவிலில் தான் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி கொண்டாடி முடித்த பிறகு அந்த சிலைகளை தண்ணீரில் கரைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். அறிவியல் ரீதியாக, ஆன்மீகம் ரீதியாக என்னென்ன காரணங்கள் இருக்கிறது தெரியுமா?

களிமண்ணில் உருவாகிறார் பிள்ளையார். அதாவது பஞ்சபூதத்தில் ஒன்றான மண். அதைப் பிரதிஷ்டை செய்யும்போது அதில் உயிர்ப்பு உருவாகிறது. கல்லிலும் உறைகிறார் கடவுள். அவரது சக்தியை நினைத்து உருகி வணங்குகிறோம். பின்னர், கொண்டாட்டமாய், பக்திப்பரவசத்துடன் விநாயகரை வழியனுப்புகிறோம். நம்மை விட்டு சென்றிடும் என்று பிரியம் காலம் தெரிந்து பிறகு நம் கண் முன்னால் தெரியும் நம்பிக்கைக்கு அளவீடே கிடையாது.
நீரில் கரையும் போது :
விநாயகரை நீரில் கரைக்கும் போது உயிர்ப்பில் இருந்து விடுபடுகிறான். பஞ்சபூதமான நீரில் கரைந்து மீண்டும் மண்ணாகவே மாறுகிறான். மாற்றம் இல்லாத மாற்றம். உறவைப் பேணத்தான் வேண்டும். ஆனால் அதுவே சாஸ்வதம் ஆகாது. அது மாயை
ஏன் 3 நாள் கழித்து?
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் முடிந்து மூன்றாம் நாள் தான் சிலையை கரைப்பார்கள். இதற்கு காரணம், களிமண்ணினால் செய்யப்பட்ட விநாயகர் சிலை ஆரம்பத்தில் ஈரப்பதத்துடன் இருக்கும். இதனை அன்றைய தினமே கரைத்தால் ஈரமான களிமண் தங்காமல் வெள்ள நீரில் அடித்துச் சென்றுவிடும் என்பதால் தான் நன்றாக காயும் வரை காத்திருந்து மூன்றாம் நாள் கரைக்க வேண்டும் என்று உருவாக்கிக் கொண்டார்கள்.

Ganapathy Homa Pooja Kit – Big

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *