காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது எதற்கு?

காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது எதற்கு?

தொன்று தொட்டே பண்டைய மக்கள் பற்றி வந்த ஓர் ஆசார முறை சூரிய நமஸ்காரம். உடல் மற்றும் மனது உறுதியடையவும் அமைதியடையவும் உதவும் ஆசாரம் இது. இதை விதி முறைகள் படி செய்யும் போது உடல் பாகங்களில் ஆற்றலும் சக்தியும் வருகின்றது.

மேற்கத்திய நாடுகள் உட்பட உலகின் எல்லா பாகங்களிலும் இந்த ஆசார முறை பிரசித்தி பெற்று இருகிறது. ஜிம்னாஸ்டிக், சன்பாத், என்ற பெயர்களில் சூரிய நமஸ்காரத்தை உட்படுத்திய பயிற்ச்சிகள் செய்து வருகின்றனர்.

சூரிய நமஸ்காரம் வாயிலாக நமது உடலில் உள்ள எல்லா மூட்டுக்களும் அசைவு ஏற்படுகிறது. சருமத்தில் விட்டமின் டி உற்பத்தி செய்யும் திறன் காலை சூரிய கதிர்களுக்கு உண்டு. கல்சியம் உற்பத்தியை கட்டு படுத்தும் திறனும் உண்டு என்பது அறிவியல் துறைகள் அங்கீகரித்து உள்ளன. மேலும் உறுப்புகளும் உறுதி பெறுவதால் காச நோய் அணுக்களின் ஆக்கிரமிப்புகளும் தடுக்கின்றன.

தொடர்ச்சியாக சூரிய நமஸ்காரம் செய்வதனால் அகால வயது முதிர்ச்சியையும் ஓரளவுக்கு தடுக்கலாம். மூட்டுக்கள் நல்ல லாபகம் அடைகின்றன. தொப்பை வயிறு வருவதை தடுக்க இயலுகிறது. மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் நிலைநிறுத்தவும் சூரிய நமஸ்காரம் உதவுகிறது.

சூரிய நமஸ்காரம் செய்பவர்கள் ஆரம்பத்தில் அனுசரிக்க வேண்டிய சில விஷயங்களை பார்ப்போம்:
பரிசுத்தமான எளிய வாழ்கை வாழ வேண்டும். அளவான உணவு அருந்த வேண்டும். குளிப்பது குளிர் நீர் ஆனால் நன்றாயிருக்கும். விசாலமானதும் காற்றோட்டம் உள்ளதுமான இடத்தில் நமஸ்காரம் செய்ய வேண்டும். நமஸ்கார வேளையில் மிக அவசியமான ஆடை மட்டும் தளர்த்தியாக அணிய வேண்டும்.

தேநீர், காபி, கொக்கோ, புகை இலை, மது பானம், முதலியவை அருந்த வேண்டாம். இப்டி அநேக விஷயங்களை கவனித்து சூரிய நமஸ்காரம் செய்ய தொடங்க வேண்டும்…….

ACD Blossom In Your Smile

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *