மார்கழியில் ஏன் மங்கல நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை?

விளக்கம்:

மார்கழி மாதத்தை ‘பீடை மாதம்’ என்று சொல்வது மூடநம்பிக்கை. மார்கழி மாதம் முழுவதுமே கடவுளை வழிபடும் மாதமாக நமது மரபில் அனுசரிக்கப்படுகிறது. தெய்வ வழிபாட்டுக்கு இடையூறு வந்துவிடக் கூடாது என்பதாலேயே மார்கழி மாதத்தில் மற்ற நிகழ்ச்சிகள் எதுவும் வைத்துக் கொள்வதில்லை.

திறக்காத திருக்கோயில்களும் திறந்திருக்கும் ஒரே மாதம் மார்கழி மாதம். வருடம் முழுக்க உணவுக்கு தேவைப்படும் உளுந்தையும், நெல்லையும் உழவர்கள் சேகரித்து வைக்கும் மாதம் இது.

கரும்பு, நெல், உளுந்து, வாழை, மஞ்சள் ஆகியவற்றை சேமிக்கவே மாதம் முழுக்க செலவாகிறது என்பதால்தான் இம்மாதத்தில் மங்கல நிகழ்வுகள் எதையும் வைத்துக் கொள்வதில்லை என்றும் சொல்கிறார்கள்.

அந்த சேகரிப்புப் பணி முடிந்ததுமேதான் தைத் திருநாளை விமரிசையாக கொண்டாடுகிறார்கள்.

மார்கழியின் முக்கியத்துவம் என்ன?

மார்கழி காலைகள் ஓசோன் நிரம்பியதாக இருக்கும் என்பது அறிவியல். இதை சுவாசிக்கும் போது நுரையீரல் புத்துணர்ச்சி பெறும். அதன் அடிப்படையில்தான் அதிகாலையில் எழுந்து பாடல்களை பாடுவதும், வாசலில் கோலமிடுவதும் என்கிற வழக்கம் வந்தது. நம்முடைய பண்பாடு என்பது அறிவியலோடு இணைந்ததுதான். காரண காரியமின்றி யாதொரு சடங்கும் நடப்பதில்லை

Brass Annapoorani Small

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *