மூ‌ன்றா‌ம் ‌பிறை ‌சிற‌ப்பு எ‌ன்ன?

 வளர்பிறையிலேயே மூன்றாம் பிறை மிகச் சிறப்பு வாய்ந்தது. அது தெய்வீகமான பிறை என்றும் சொல்லலாம். இத்தாய் பிறை சூடிய பெருமானே என்று நாயன்மார்கள் பாடுகிறார்கள். இந்த மூன்றாம் பிறையைத்தான் சிவன் தன் முடி மீது அணிந்திருக்கிறார். காமாட்சி அம்மனைப் பார்த்தாலும் அந்த மூன்றாம் பிறைதான்.
இந்த மூன்றாம் பிறைக்கு என்ன விசேஷம் என்றால், அமாவாசை முடிந்து வெளிப்படக்கூடிய பிறைதான் மூன்றாம் பிறை. ஏனென்றால், அமாவாசை அன்றும், அதற்கு மறுநாளும் சந்திரன் தெரியாது. அதற்கு மறுநாள்தான் சந்திரன் மிளிரும். ஒரு கோடு போல ஒளிக்கீற்றாக வரும். அதனை ஏதாவது ஒரு காட்டில் இருந்தோ, ஒரு கிராமத்தில் இருந்தோ, மின் விளக்கு‌க‌ள் இல்லாத இடத்தில் இருந்து அடிவானத்தில் தோன்றும் போது அதன்

பிரகாசத்தைப் பார்த்தால், அது உங்களுக்குள் ஏதோ ஒன்றைத் தூண்டும். முழு நிலவு எனு‌ம் பெளர்ணமி நிலவு தூண்டாத சில விஷயங்களை இந்த மூன்றாம் பிறை நிலவு நமக்குத் தூண்டும். வளர்ந்த பிள்ளைகளை விட வளரும் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளைப் பார்க்கும் போது நமக்கு ஒரு உற்சாகம் வருகிறதல்லவா, அந்தத் தூண்டுதலும், உற்சாகமும் மூன்றாம் பிறையில் தெரியும்.
அனைத்து மதங்களிலுமே மூன்றாம் பிறை வழிபாடுதான் தெய்வீகமான வழிபாடாக இருக்கிறது. இஸ்லாம் மத‌த்‌தி‌லிரு‌ந்து, கிறித்தவம், ஜைன‌ம், இந்து மத‌ம் என எல்லா மதத்திலும் மூன்றாம் பிறை என்பது தெய்வீக அம்சமாக உள்ளது. அந்தப் பிறையை கண்டு வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும். அதுவும், திங்கட்கிழமையுடன் மூன்றாம் பிறை வரும்போது, சோமவாரம் என்பார்கள் திங்கட்கிழமையை. அந்த சோமவாரத்தில் வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும். அதனால் மூன்றாம் பிறை என்பது ஒரு தெய்வீகமான பிறை. அதனைப் பார்த்தாலே மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கக் கூடியது

 

 

Diwali Special Design Colour Lamp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *