தோஷ நிவர்த்தி பெற ஏற்ற வேண்டிய தீபங்கள்….!

தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற 3 சக்திகளும் உள்ளன. தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது. அதாவது தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. மனதில் உள்ள கவலைகளைப் போக்குகிறது.
தினமும் மாலையில் தீபம் வைத்து வணங்கிப் பூஜை செய்ய வேண்டும். தினமும் காலையிலும், மாலையிலும், வீட்டிலும், வியாபார இடங்களிலும்  விளக்கேற்றி வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும். லட்சுமியின் அருள் கிடைக்கும்.
தீபம் ஏற்றுவதால் நம் வேண்டுதல் நிறைவேறுகின்றன. தீபம் ஏற்றுவதற்கு பலவித முறைகள் உள்ளன. கடவுளுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் நம்  வேண்டுதல்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கின்றன. மேலும் தோஷம், பாவம் பரிகாரங்களுக்கு என்று உள்ள எண்ணிக்கையில் தீபங்களை ஏற்றி வழிபாடு  செய்தால் அதன் பலனை விரைவில் அடையலாம். இப்போது தோஷங்களை போக்கும் தீப எண்ணிக்கையை பார்க்கலாம்.
ராகு தோஷம் – 21 தீபங்கள்
சனி தோஷம் –  9 தீபங்கள்
குரு தோஷம் – 33 தீபங்கள்
துர்க்கைக்கு –  9 தீபங்கள்
ஈஸ்வரனுக்கு – 11 தீபங்கள்
திருமண தோஷம் – 21 தீபங்கள்
புத்திர தோஷம் – 51 தீபங்கள்
சர்ப்ப தோஷம் – 48 தீபங்கள்
காலசர்ப்ப தோஷம் – 21 தீபங்கள்
களத்திர தோஷம் – 108 தீபங்கள்
எந்த தோஷங்களால் ஒருவர் பாதிக்கப்பட்டியிருக்கிறாரோ அவர்,மேற்கண்ட முறைப்படி தீபங்கள் ஏற்றி அந்தந்த தெய்வங்களை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி வளமான வாழ்வு அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *