வீட்டில் உள்ள வாஸ்து குறைபாட்டை தீர்க்கும் மாவிலை!

சமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலான மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படுபவை மங்களத் தோரணங்கள் எனப்படும். தோரணம் தமிழர்கள் நிகழ்வுகளைக் குறிக்கும் பண்பாட்டு அடையாளமாக செய்யும் ஒரு அலங்கார அமைப்பாகும்.

பூஜைகள் செய்யும்போது கலசத்தின் வாயிலில் தேங்காய் வைப்பதற்கு முன் சில மாவிலைகள் இட்டு, அதன்மீது தேங்காயை வைத்துத்தான் சாமியை ஆவாஹனம் செய்வார்கள். பூஜை முடிந்த பின்னர் மாவிலையால் கலசத்தில் உள்ள புனித நீரை  பக்தர்கள் மீது தெளிப்பர். இப்படி விழாக்களில் முதன்மை இடம் பெறுவது மாவிலை. மாவிலையில் லட்சுமி தேவி வசிக்கிறாள்.
* விசேஷ நாட்களில் மட்டுமல்லாது அடிக்கடி தலைவாயிலில் மாவிலை தோரணம் கட்டுவது வாஸ்து குறைபாடுகள்  விரைவில் தீர வழிபிறக்கும்.
* லக்ஷ்மி கடாக்ஷம்
* எதிர்மறை அதிர்வுகளை நீக்கும்
* நச்சுக் காற்றை சுத்தப்படுத்தும்
* தலைவாயிலில் இருக்கும் வாக்தேவதையின் காதில் எதிர்மறை வார்த்தைகள் விழாது தடுக்கும்
* மாவிலை காய்ந்தாலும் அதன் சக்தி குறையாது.
* பிளாஸ்டிக் மாவிலைகளை தொங்கவிடுதல் கூடாது.
மாவிலைகளுக்கு இன்னொரு தனிச்சிறப்பு உண்டு. மரத்திலிருந்து வெட்டப்பட்ட பின்னரும் கூட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சக்தி மாவிலைகளுக்கு உண்டு என்கிறார்கள். அலங்காரத்துக்கு மட்டுமல்ல; ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது மாவிலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *