அக்ரூட் பருப்பு சாப்பிட்டால் இளைஞர்களின் மனநிலை சீராகும்

பயன்கள்:

வால் நட் எனப்படும் அக்ரூட் பருப்புகளை அதிகம் சாப்பிடும் இளைஞர்கள், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து விடுபடலாம் என்று, ஆய்வில் தெரியவந்துள்ளது.

நவீன தலைமுறையில் இளைஞர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக, பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். இது வளர்ந்த நாடுகளில் இருந்து, வளரும் நாடுகள் வரை பொதுவான சீர்கேடாக நீடிக்கிறது. இதைச் சரிசெய்யும் விதமாக, உணவுப் பழக்கத்திற்கும், மன நிலைக்கும் தொடர்பு உள்ளதா, என்பது பற்றி நியூ மெக்சிகோ பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆய்வு நடத்தினர்.

இதில், ஆப்ரிக்க அமெரிக்கன், ஆசிய மற்றும் காகாஷியன் உள்ளிட்ட இனங்களைச் சேர்ந்த 64 இளைஞர்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு, தினசரி அக்ரூட் பருப்புகளும், ஒரு பிரிவினருக்கு முட்டை, வாழைப்பழம் போன்ற உணவு வகைகளும் கொடுக்கப்பட்டு வந்தன.

ஒரு மாத முடிவில், வாழைப்பழம் சாப்பிடுவோரை விட, அக்ரூட் சாப்பிட்ட இளைஞர்கள், மனச்சிக்கல் ஏதுமின்றி, சீரான மனநிலையில், ஜென் துறவி போன்று, எத்தகைய நெருக்கடியையும் எதிர்கொள்வதாக, உறுதி செய்யப்பட்டது.

Walnut Orange Face scrub

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *