அயோடினுக்கும் தைராய்டு பாதிப்புக்கும் என்ன தொடர்பு? ஆச்சரியமளிக்கும் உண்மைகள்!!

அயோடின் சத்து பற்றி இன்றைக்கு பலருக்கும் தெரிந்திருக்கிறது. அயோடின் குறைபாட்டினால் தைராய்டு பிரச்சனை ஏற்படும் என்றளவுக்கு மட்டும் தெரிந்து வைத்திருப்பவர்களுக்கு அயோடின் குறித்த முழுத் தகவல்களும் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.

அயோடின் பூர்விகம் கடல் நீர்தான். கடலில் வாழும் மீன்கள், கடலில் விளையும் தாவரங்களான கடல் பாசிகள், கடல் நீரில் எடுக்கும் உப்பு, கடலோரப் பகுதிகளில் விளையும் தாவரங்கள் எல்லாவற்றிலும் அயோடின் உண்டு. கடற்கரையிலிருந்து வெகுதூரம் தள்ளி அமைந்திருக்கும் பிரதேசங்களின் நிலத்தில் அயோடின் குறைவு. ஆகவே, அந்தப் பகுதி தாவரங்களிலும் அயோடின் குறைவு.

அயோடின் என்றாலே அது உப்பில் இருந்து கிடைக்ககூடிய சத்து என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை அது கிடையாது.

ஐயோடின் என்பது ஒரு வகை மினரல். அந்த மினரல் சரியான விகிதத்தில் நமக்கு கிடைக்கவில்லையெனில் அவை பல்வேறு உடல் நல பாதிப்புகளை உண்டாக்கிடும்

அயோடின் ஒரு வேதியல் தனிமம். இதன் குறியீடு ‘I’. அயோடின் என்ற சொல் கிரேக்கத்துக்கு சொந்தமானது. ஐயோடேஸ் (Iyodes)என்ற கிரேக்க சொல்லுக்கு வயலட்/கருநீலம் நிறம் உள்ளது என்று பொருள். இதன் நிறத்தை ஒட்டியே அயொடின் எனற பெயர் இதற்கு சூட்டப்பட்டது.

புவியில் கிடைக்கும் அரிதான தனிமங்களில் 47 வது இடத்தில் உள்ளது. இது 114 °C யில் உருகும். ஆனால் திட நிலையிலிருந்து நேரிடையாக வாயு நிலைக்குப் போய்விடும். இதன் உப்புக்கள் நீரில் கரையக்கூடியவை. அதன் மூலம்தான் அயோடின் கரைசல் கிடைக்கிறது.

இச் சுரப்பி தைராக்சின் என்ற ஹார்மோனைச் சுரக்க அயோடின் சத்துத் தேவைப்படுகிறது. அயோடின் சத்து குறைந்தால் தைராக்சின் ஹார்மோன் சுரப்பு இருக்காது. இதனால் உடல் வளர்ச்சி தடைபடுகிறது.

அயோடின் சத்து பூமியின் மண் படிவங்களில் கலந்துள்ளது. அயோடின் சத்தை உள்ளடக்கிய மண்ணில் வளரும் தாவரங்கள், அம் மண்ணில் தேங்கும் நீர் ஆகியவற்றிலிருந்து மனிதனுக்கு அயோடின் சத்து கிடைக்கிறது.

ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது, கால இடைவெளி இல்லாமல் திரும்பத் திரும்பப் பயிரிடுவதால் மண் வளம் குன்றிப் போதல் போன்ற காரணங்களால் இயற்கையில் இருந்து அயோடின் சத்து முழுமையாகக் கிடைப்பது இல்லை.

பிறந்தது முதல் 5 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 0.07 மில்லி கிராமில் இருந்து 0.38 மில்லி கிராம் வரை அயோடின் தேவை. ஒரு நாளில், 6 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் 0.1 மில்லி கிராமில் இருந்து 0.14 மில்லி கிராம் வரை அயோடின் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களில், ஆண், பெண் என இருவரும் தினமும் 0.11 மில்லி கிராம் முதல் 0.12 மில்லி கிராம் உணவுடன் சாப்பிட்டு வருவது அவசியம்.தாய்மை அடைந்த பெண்களுக்கு அயோடின் குறைபாடு பிரசவம் முடியும்வரை இருக்கும்.

அயோடின் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு காது கேளாமை பாதிப்பு காணப்படும். அது மட்டுமல்லாமல், தைராய்டு சுரப்பி முறையாக வேலை செய்வதும் பாதிக்கப்படும்.

உங்கள் உடலில் அயோடின் சத்து குறைவாக உள்ளது அல்லது பற்றாகுறையாக இருக்கிறது என்பதை சில அறிகுறிகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

முன் கழுத்தில் வீக்கம் தென்படும். எந்த காரணமும் இன்றி தானாக முன் கழுத்து வீங்க ஆரம்பித்தால் அயோடின் சத்து குறைபாட்டினால் உண்டான தைராய்டு பாதிப்பாக இருக்கும்.

தைராய்டு சுரப்பி முன் கழுத்தில் பட்டாம்பூச்சி வடிவில் இருக்கும். தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை எனில் இந்த சுரப்பி வீங்கிடும். இது சரியாக சுரப்பதற்கு அயோடின் சத்து மிகவும் அவசியமாகும்.

அபிரிதமாக உடல் எடை அதிகரிக்கும். நம் உடலில் போதுமான அளவு அயோடின் இல்லையென்றால் தைராய்டு சுரப்பி வேலை செய்யவதில் சிக்கல்கள் உண்டாகும். தைராய்டு சுரப்பி நம் உடலின் மெட்டபாலிசம் சீராக செயல்பட உதவுகிறது. நாம் சாப்பிடும் உணவிலிருந்து சத்துக்களை பிரித்தெடுக்க இவை உதவுகிறது.
தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை எனில் நாம் சாப்பிடும் உணவு முறையாக செரிக்கப்படாமல் போகும் இதனால் அடிக்கடி பசியெடுத்து உடல் பருமன் அதிகரிக்கும்.

எப்போதும் சோம்பலாக உணர்கிறீர்கள் என்றால் உங்கள் உடலில் அயோடின் சத்து குறைவாக இருக்கும். நம் உடலை எனர்ஜியாக வைத்திருக்க தைராய்டு ஹார்மோன் மிகவும் அவசியமாகும்.

அயோடின் குறைவினால் தைராய்டு சுரப்பி சுரப்பிதில் சில சிக்கல்கள் உண்டாவதால் எப்போதும் சோம்பலாக உணர்வீர்கள்.

தலையில் இருக்கக்கூடிய செல்கள் மீள் உற்பத்தி ஆவதற்கும் தைராய்டு சுரப்பி முக்கியப் பங்காற்றுகிறது. அது சரியாக சுரக்கவில்லையெனில் மீள் உற்பத்தி ஆவது தவிர்க்கப்படும். இதனால் தலைமுடி அதிகமாக கொட்டும்.

முடியை முறையாக பராமரிப்பது மட்டுமின்றி முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை நாம் எடுத்துக் கொண்டால் மட்டுமே முடி நீளமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்ந்திடும்.

தைராய்டு சுரப்பி குறைவாக இருப்பவர்களில் எழுபது சதவீதத்தினருக்கு வறண்ட சருமம் காணப்படும். சருமத்தில் இருக்கக்கூடிய செல்களின் சீரான இயக்கத்திற்கும் தைராய்டு சுரப்பி மிகவும் அவசியமாகும்.

 

தைராய்டு சுரப்பி குறைவாக சுரப்பவர்களுக்கு வியர்வை வராது. அயோடின் சத்து குறைபாடு இருந்தால் தைராய்டு சரியாக சுரக்காது என்பதால் வியர்வை சுரக்காது. வியர்வை வெளியேறினால் மட்டுமே அதன் மூலமாக சருமத்தில் இருக்ககூடிய டாக்ஸின்கள் வெளியேறும்.

அவை வெளியேறாததால் சருமத்தில் பிரச்சனைகள் உண்டாகிடும்.

 http://tmpooja.com/shop/pooja-items-online-pooja/velleruku-vinayakar-ganesha-to-veller-3/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *