இதெல்லாம் எவ்ளோ சாப்டாலும் எடை அதிகரிக்காது தெரியுமா?

உடல் எடை குறைப்பு இன்று எல்லாரும் சொல்லிக் கொண்டிருக்கிற விஷயம். அதற்கு முழு முதற்காரணம் மருத்துவ ரீதியில் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் விழிப்புணர்வு என்றே சொல்லலாம்.

உடல் எடை அதிகரிப்பால் என்ன மாதிரியான பிரச்சனைகள் வருகிறது என்று தொடர்ந்து சொல்வதால் வந்த விணையாக கூட இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் தான் சரியான எடையில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகங்கள் உண்டு.

அதோடு எந்த உணவுப் பொருளை பார்த்தாலும் இதனை சாப்பிடலாமா வேண்டாமா என்று யோசிக்கத் தோன்றுகிறது.அதோடு சில உணவுகள் காரணங்களே இன்றி அல்லது தவறான புரிதல்களோடு ஒதுக்கி வைத்துக் கொண்டேயிருக்கிறோம்.

சில உணவுப்பொருட்கள் எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் தெரியுமா? அவை என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள் .

குறைவான கலோரிகள் கொண்ட காலிஃப்ளவர், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. ஒரு கப் காலிஃப்ளவரில் 28-52 அளவு கலோரிகளே உள்ளது என்பதால், இதை உட்கொள்வதால் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்வதில்லை. மேலும் உடல் எடையையும் குறைத்துக் கொள்ள முடியும்.
காலிஃப்ளவரில் உள்ள பொட்டாசியம் சத்து, உடல் செயல்பாடுகளை சீராக்குவதுடன், நீர் அருந்துதலை அதிகப்படுத்தும்.

ஒரு கப் காலிஃப்ளவரில், சுமார் 3.35 கிராம் அளவில் நார்சத்து உள்ளது. நார்சத்து உடலுக்கு மிகவும் தேவை. ஏனெனில் இவையே செரிமானத்தை சரி செய்கின்றது.

பீட்ரூட்டில் நிறைய உணவுச் சத்துகள் உண்டு. விட்டமின் சி, பொட்டாசியம்,ஃபோலாசின், பீட்டா கரோட்டின், மாவுச்சத்து, இரும்புச் சத்து இதில் அதிகம் உள்ளன.

பீட்ரூட்டில் இருக்கும் முக்கியமான தன்மை இதில் கொழுப்புச் சத்து கிடையாது. இதை ஒரு காலத்தில் ஐரோப்பாவில் புற்றுநோய்த் தடுப்பாக பயன்படுத்தினார்கள். இதன் சிவப்பு வண்ணத்தில் (பீட்டா கரோட்டின்) புற்றுநோய் தடுப்புத் தன்மை சேர்ந்திருப்பதால் புற்றுநோயுடன் போராடும் சக்தி உள்ளது. மேலும் பீட்ரூட் நமது உடலின் ஆக்ஸிஜன் உறிஞ்சும் சக்தியை அதிகரிக்கிறது.

பூசணிக்காயின் விதைகளில் விட்டமின் பி, விட்டமின் ஏ, மினரல்ஸ், கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், ஸிங்க், பிடோசின்ஸ், லினோனெலிக் அமிலம் ஆகியன அடங்கியுள்ளன. இதில் கலோரி மிகவும் குறைவாக இருப்பதால் உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக சாப்பிடலாம். மேலும் பூசணிக்காய் உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றக்கூடியது.

சோளத்தால் தயாரிக்கப்படுவது பாப்கார்ன். சோளத்தில் பி காப்ளெக்ஸ் வைட்டமின்கள், வைட்டமின் ஈ ஆகியவை நிறைவாக உள்ளன. எனவே இது செரிமானத்தை எளிதாக்கும்; மலச்சிக்கலைத் தவிர்க்கும். பாப்கார்னில் இருக்கும் நார்ச்சத்து ரத்தத்தில் சேரும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவும்.

இதில் உள்ள நார்ச்சத்து, நன்கு சாப்பிட்ட திருப்தியைத் தந்துவிடும்; எனவே, இது பசியைத் தூண்டும் ஹார்மோனைக் கட்டுப்படுத்தி, பசியுணர்வைக் குறைக்கும். எனவே, உடல் எடையைக் குறைக்கவிரும்புபவர்கள் இதைச் சாப்பிட்டால், அதிக உணவு சாப்பிடவேண்டிய அவசியம் ஏற்படாது.

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், வைட்டமின் ஏ,வைட்டமின் கே போன்ற வைட்டமின்கள் அமைந்துள்ளன.
மேலும் , செம்பு,அயோடின்,மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.

ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது.

குறிப்பாக ஸ்ட்ராபெரி பழத்திற்கு ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இதில் ஆன்டி ஆக்சிடன்ட் உள்ளதால், செல் அழிவை தடுக்கும் ஆற்றல் கொண்டது.இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்

ஆப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சீர் செய்வதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன.

ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது கரைந்துவிடும்.
ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்களை கொண்டுள்ளது.

இதில் உள்ள பாலிஃபீனால், உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும். எனவே எடை குறைய விரும்புவோர், ஆப்பிளை தினமும் சாப்பிடுவது சிறந்தது.

ஒரு சாதாரண கோழி முட்டையில் 80 கலோரிச் சத்து இருக்கிறது. மு‌ட்டையை எ‌வ்வாறு சமை‌த்து சா‌ப்‌பி‌ட்டாலு‌ம் இ‌ந்த கலோ‌ரி‌ச்ச‌த்துக‌ள் குறைவ‌தி‌ல்லை. இதில் 60 கலோரி முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது. 20 கலோரிதான் வெள்ளைக்கருவில் இருக்கிறது.
உடல் பருமன் அதிகமாக கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டுமே சாப்பிடுவது நல்லது.

தினமும் 300 மில்லிகிராம் கொழுப்புச்சத்து ஒருவருக்கு தேவைப்படுகிறது. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே 275 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது. அதனால் அதனை தவிர்ப்பது வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட வேண்டும்.

கடைசியாக, முட்டையின் வெள்ளை கரு என்பது புரதத்தின் அரசனாகும். அதனால் அது உங்களுக்கு மிகவும் நல்லதாகும். முட்டையின் வெள்ளை கருவில் இருந்து தான் புரதச்சத்து அதிகமாக வருகிறது. அதனால் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி விட்டு, வெள்ளை கருவை மட்டும் உட்கொண்டால், புரதச்சத்தை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி, உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

காய்கறிகளுள்ளே குறைவான கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் கிடைக்கும் கலோரி 18 தான்.

வெள்ளரியில் உள்ள நீர் சத்து நா வறட்சியைப் போக்குவதுடன் பசியை உண்டாக்கும். உடம்புக்குக் குளிர்ச்சியை உண்டு பண்ணும்.வெள்ளரியில் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், மற்றும் குளோரின் இதில் உண்டு .இரத்ததில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் அதிகம் உண்டு. ஈரல், கல்லீரல் சூட்டைத் தணிப்பதால் நோய் குணமாகும்.

நச்சுக்களை வெளியேற்றி, போதுமான நீர்ச்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமான வேலையை ஒரு வெள்ளரிக்காய் அன்றாடம் செய்கிறது.

அதிக நீர்ச்சத்து கொண்டுள்ளதால், கொழுப்பு கார்போஹைட்ரேட் சத்துக்களை வேகமாய் ஜீரணித்து சக்தியாய் மாற்றிவிடும். மேலும் உடல் எடையை அதிகரிக்க செய்யாது. வயிற்றிலுள்ள கொழுப்பைக் கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்யும்.

தக்காளியை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், மிகவும் நல்லது. ஏனெனில் அவை உடலை வறட்சியடையாமல் பார்த்துக் கொள்ளும்.அதோடு அவை எண்ணற்ற செரிமான நொதிகளை உற்பத்தி செய்து, உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமடைய உதவிப்புரியும்.

தக்காளிக்கு உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது. மேலும் இது உடலில் நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை சீராக பராமரிக்கும்.

தக்காளியில் கலோரிகள் இல்லாததால்,உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக உட்கொள்ளலாம்.

 

Ganapathy Homa Pooja Kit – Small

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *