கண் சிமிட்டுங்கள்!

பயன்கள்:

புத்தகத்தில் படிப்பது போலவே, கணிணியிலும் படிக்கவேண்டியிருக்கிறது.மேல் வகுப்புகளுக்குப் போகப் போக கணிணியை அதிகம் பயன்படுத்தவேண்டியிருக்கும்.கணிணி அவசியம்தான். அதற்காகக் கண்ணைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது. கணிணியை அதிக நேரம் பயன்படுத்துகிறவர்களுக்கு’ கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் ‘ (COMPUTER VISION SYNDROME’) என்ற பாதிப்பு ஏறப்டுகின்றது. கண்ணில் எரிச்சல், அரிப்பு, நீர் வடிதல், கண் உலர்தல், கண்ணைச் சுற்றி வீக்கம், கண் உறுத்துதல், ஆகியவை ‘ விஷன் சிண்ட்ரோமின்’  அறிகுறிகள்.

குறிப்பிட்ட இடைவெளியில் கண் சிமிட்டுவது அவசியம்.இந்த இடைவெளி குறையும்போது, மேலே சொன்ன கோளாறுகள் உருவாகின்றன.

கண் இமைக்காமல் இருந்தால், கண்ணீர் சுரபப்து குறைகிறது. கண் ஈரம் ஆவது தடைப்படுகின்றது. கண் திறந்தே இருப்பதால்,சுரக்கும் கண்ணீர், வேகமாகக் காற்றில் ஆவியாகி விடுகின்ற்து.இதனால் கண்ணில் வறட்சி ஏறப்டுகின்றது. ஒரு நிமிடத்திற்கு சரியாக 12 முறை கண் சிமிட்டவேண்டும். தூங்கும்போது  தவிர, ஒரு நாளைக்கு சுமார் 10,000 முறை கண் சிமிட்டவேண்டும்.

 

 

Kinsfolk Olive oil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *