குளிர் காலத்தில் சோப்புக்கு குட்பை

Benefits :

முதல் வேலையாக குளிர் காலம் முடியும்வரை சோப்புக்கு நீங்கள் குட்பை சொல்லுங்கள்.கடலை பருப்பு, பயத்தம் பருப்பு, ஆரஞ்சுப் பழத் தோல் இம்மூன்றையும் சம அளவு எடுத்துக் காய வைத்து, மெஷினில் அரைத்துக்கொள்ளவும். அதற்கெல்லாம் நேரமில்லாதவர்கள் கடலை மாவு, பயத்தமாவுடன் , நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் ஆரஞ்சுப் பழத் தோல் பொடியை வாங்கிக் கலந்துகொள்ளவும். குளிக்கும்போதும் முகம் கழுவும்போதும், சோப்புக்குப் பதில் இந்தப் பொடியை மட்டுமே உபயோகிக்கவும்.
HIBISCUSதலைக்குக் குளிக்க செம்பருத்தி இலை, சீயக்காய், வேப்பிலையை உலரவைத்து அரைத்த பொடியை உபயோகிக்கவும். குளிர் காலத்தில் பொடுகும் அதிகமாகும். முடி வறண்டு போகும். வேர்க் கால்கள் அடைபடும். இவற்றையெல்லாம் தவிர்க்க வாரம் இருமுறை தலைக் குளியல் அவசியம். நல்லெண்ணெய், தேங்காயெண்ணெய், ஆலிவ் ஆயில், கடுகு எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் சம அளவு எடுத்து, வெந்நீர் உள்ள பாத்திரத்தினுள் வைத்து, டபுள் பாயிலிங் முறையில் வெதுவெதுப்பாக சூடாக்கி , தலை முதல் கால்வரை தடவி மஸாஜ் செய்யவும். எண்ணெய் முழுக்க சருமத்தினுள் இறங்கும்வரை தேய்த்து, 15 நிமிடங்கள் ஊற விடவும்.
மேலே சொன்ன கடலை மாவு, பயத்த மாவு, ஆரஞ்சுத் தோல் கலவைப் பொடியை சிறிது தண்ணீர் விட்டு குழைத்து, பேஸ்ட் போலச் செய்து தேய்த்துக் குளிக்கவும். தலைக்குத் தனியே அரைத்து வைத்துள்ள பொடியை சாதம் வடித்த கஞ்சியில் குழைத்து, மறுபடி அடுப்பில் வைத்து, லேசாகச் சூடாக்கி , வெதுவெதுப்பான சூட்டுடனேயே தேய்த்து அலசவும். ஷாம்புவைத் தவிர்க்கவும். தலைக்குக் குளித்ததும் தலையைத் துவட்டும்போது, டவலால் முடியை அடித்து துடைப்பார்கள். இப்படிச் செய்தால், ஏற்கெனவே பனிக் காலத்தில் பலவீனமாக இருக்கும் கூந்தலானது உடைந்து வேறோடு உதிரும். லேசாக தலையை துவட்டிக் கொள்வது நல்லது..
இஞ்சி உங்கள் அழகைக் கூட்டும்:

நாம் இஞ்சியை சமையலுக்குப் பயன்படுவது என்றும், ஆரோக்கியத்துக்கு சிறந்தது என்றும் மட்டுமே நினைத்துள்ளோம். ஆனால், இந்த வியத்தகு இஞ்சி அழகுகுக்கான குணங்களையும் , தோல் பராமரிப்புக்கான பலவித குணங்களையும் தன்னுள்ளே அடக்கியுள்ளது.
வயதாவதைக் குறைத்துக் காட்டும்:
இஞ்சியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் தோலிலுள்ள டாக்ஸினைக் குறைக்கும். இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து வயதாவதைக் குறைத்துக் காட்டுகிறது.
தீப்புண்களைக் குணமாக்கும்:
இஞ்சிச் சாறை தீப்புண்களின்மீது தடவினால், தீப்புண்கள் குணமாகும்.
தோல் பளபளப்பாகும்:
இஞ்சிச் சாறை புதிதாக எடுத்து தோலின் மீது தடவி வந்தால், தோல் பளபளப்பாகும்.
முடி உதிர்வதைத் தடுக்கும்:
இஞ்சியின் வேரானாது முடியை பலமாக்கி, முடி உதிர்வதைத் தடுக்கும்.
முடி வளர்வது அதிகரிக்கும்:
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதால், தலை மண்டைக்கும் ரத்த ஓட்டத்தைக் கொண்டு சேர்க்கும். இது முடியை வளரச் செய்வதுடன், முடியை சில்க் போன்றும், பளபளப்பாகவும் மாற்றும்.
பொடுகைப் போக்கும் :
இஞ்சி ஒரு கிருமி நாசினி என்பதால், இயற்கை முறையில் பொடுகை நீக்கவல்லது.
முடி பிளவுறுவதைத் தடுக்கும்:
இஞ்சித் தைலம் கொஞ்சம் ஷாம்புவுட்ன் கலந்து தேய்த்துக் குளித்தால், முடி பிளவுறுவது நிற்கும். காய்ந்துபோகும் முடிக்கு சிறந்த மாய்ஸரைஸராக செயல்பட்டு , முடி உலர்வதைத் தடுக்கும்.

 

 

Ashtalakshmi Brass Kalasam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *