கொல்லிமலையில் கிடைக்கும் அபூர்வ மூலிகையான யானை கொழிஞ்சி

வடவள்ளி, இரிக்கி என்ற பெயர்களில் அழைக்கப்படும் யானைக் கொழிஞ்சி, தமிழகத்தின் கொல்லிமலை, சேர்வராயன் மலை, ஏற்காடு மற்றும் ஜவ்வாது மலைகளில், மிக அரிதாகக் காணப்படுகின்றன. ஆப்பிரிக்க தேசங்களைப் பூர்வீகமாகக் கொண்ட யானைக் கொழிஞ்சி, பின்னர் ஆசிய நாடுகளுக்கும், அவற்றை ஒட்டிய தீவுகளுக்கும் பரவியது.

கொழிஞ்சி என்ற பெயர்க்கான காரணம் :

யானைக் கொழிஞ்சியின், பசுமையான இலைகளுடன் கூடிய கிளைகள், யானைகளின் விருப்பமான தீனியாகும், கிளைகளை யானைகள் பற்றி ஓடிக்கும்போது, கிளைகளில் இருந்து தண்ணீர் வடியும், அந்தத் தண்ணீரே, யானைகள் இவற்றை விரும்பி உண்பதற்குக் காரணம் என்றும், யானைகளுடன், பழங்குடி இனத்தவரும், இதன் கிளைகளை ஒடித்து, கோடைக்காலங்களில், தாக சாந்தி செய்து கொள்வார்கள் என்கின்றனர். அதனால்தான், இதன் பெயர் யானைக் கொழிஞ்சி, என்றானது என்கின்றனர்.

மிகப் பெரிய பழங்கள்!!

யானைக் கொழிஞ்சி, மரங்களைப் பற்றிப் படர்ந்து வளருவதைக் காண, பசுமையான அடர்ந்த இலைப்பந்தல் போன்ற தோற்றத்தில் இருக்கும்.

குளிர்காலம் முடிந்து, கோடைக்காலம் தொடங்கும் நாட்களில் இந்தக் கொடியில் பூக்கள் பூக்கும், அவற்றில் சில மட்டுமே, காயாகி, பழமாகும். இந்த பிரமாண்டமான கொடியின் காய்கள் கனிந்து பழமாகும்போது, இத்தனைப் பெரிய பழமா, என்று மலைப்பாக இருக்கும்.

மிகப் பெரிய பழங்கள்!!

நோய்களை குணமாக்கும் :

பக்க வாதம் கைகால், உடல் வலி, சளி பாதிப்புகள், பார்வைக் கோளாறுகள், வயிறு மற்றும் கல்லீரல் பாதிப்புகளைப் போக்கும் வைத்தியத்தில், மரப்பட்டைகளும், விதைகளும் பயன் தருகின்றன. கொடிப்பட்டையின் சாறு, உடலுக்கு ஊட்டம் தரும் பானம்போல, மலைவாழ் மக்களால், உபயோகிக்கப்படுகின்றன.

நோய்களை குணமாக்கும் :

வண்ணக்கனவுகள் தரும் :

ஆப்பிரிக்க தேசங்களில், யானைக் கொழிஞ்சியை, ஆற்றல்மிக்க கனவுகளின் கொடியாகக் கருதினர். இரவு உறங்கப்போகுமுன், விதையின் பருப்பை புகையிலை மற்றும் இறைச்சி சேர்த்து, புகை போல பிடிக்கின்றனர். இதன் மூலம், விரும்பிய கனவுகளை உறக்கத்தில் அடைய முடியும், என நம்பினார்கள்.

வண்ணக்கனவுகள் தரும் :

எலும்பு பாதிப்பு :

விதை, இலைகள் மற்றும் பட்டைகளைப் பயன்படுத்தி மருந்து தயாரித்து அதனை மஞ்சள் காமாலை, எலும்பு பாதிப்புகளைப் போன்ற நோய்களுக்கு தருகின்றனர். அதனால்தான் கொல்லிமலையில் மருந்துகளுக்கு விசேஷத்தன்மை உண்டு.

எலும்பு பாதிப்பு :

விதைகளின் நன்மை :

விதை, இலைகள் மற்றும் பட்டைகளை அரைத்து, அதை, உடலில் தடவி வர, வியாதிகள் அகலும் என்று நம்புகின்றனர். மேலும், உடலில் ஏற்பட்ட காயங்களை ஆற்றவும், பல் வலியைப் போக்கவும், இந்தப்பசையையே, பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

விதைகளின் நன்மை :

அதிர்ஷ்டம் மிக்க யானைக் கொழிஞ்சி விதைகள்:

யானைக் கொழிஞ்சி விதைகள் அதிர்ஷ்டத்தைத் தரவல்லவை என்று, பழங்குடி இனத்தவர், குழந்தைகளின் கழுத்தில் இதன் விதைகளை கயிற்றில் கோர்த்து, அணிவிக்கின்றனர்.

ஆண்கள் மற்றும் பெண்கள் இதன் விதைகள் மூலம், செய்யப்பட அணிகலன்களை காதில் அணியும் தோடு போன்றும், கழுத்தில் அணியும் மாலைகள் போன்றும் அணிந்து கொள்கின்றனர்.

பயன்கள் :

யானைக் கொழிஞ்சி பழத்தின் பசை, நீர்நிலைகளில் இருக்கும், மீன்கள் உள்ளிட்டவற்றை பிடிக்கப் பயன்படுகிறது.கொல்லிமலை உள்ளிட்ட மலைவாழ் மக்களில் சிலர், இந்தச்செடியின் காய்களை, விதைகளை. சோப் போலவும், ஷாம்பூ போலவும் இன்றும், பயன்படுத்தி வருகின்றனர்.

கயிறு செய்ய :

மலைவாழ் மக்களின் தீப்பந்தத்திற்கு, இதன் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணை பயன்படுகிறது. பட்டையில் இருந்து எடுக்கப்படும் நார், வலை பின்னவும், வலுவான கயிறு செய்யவும் பயன்படுகிறது.

கயிறு செய்ய :

யானைக் கொழிஞ்சி மரங்கள் அழிவதற்குக் காரணம் :

யானைக் கொழிஞ்சி ஆரம்ப முதலே, தமது வளர்ச்சிக்கு பிற மரங்களைச் சார்ந்தே இருக்கிறது. இது வளர வளர, அருகில் உள்ள மரங்களை தனது கொடியின் மூலம், வலுவாகப் பின்னி, அவற்றின் வளர்ச்சியை பாதிப்பது மட்டுமல்லாமல், சமயங்களில், அந்த மரங்களின் அழிவுக்கும் காரணமாகிவிடுகிறது.

இதனால், அரிதான செம்மரங்கள், கருங்காலி மற்றும் தேக்கு போன்ற மரங்களின் வளர்ச்சி தடைபடுகிறது. இந்த பாதிப்புகளைக் களையவே, அந்த மரங்களைப் பற்றியிருந்த யானைக் கொழிஞ்சி கொடிகளை, அழித்து விட்டனர். இதுவே, யானைக் கொழிஞ்சி கொடிகளின் அழிவுக்குக் காரணமாகி விட்டது.

 

Sirk Siruvam

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *