சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கும் செவ்வாழைப் பழம்!

செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் எனும் அமிலம் காணப்படுகிறது. செவ்வாழையில் உயர்தர புரதச்சத்து உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் விட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.

இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் எனும் அமிலம் கண்நோய்களை குணமாக்கும். நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வர வேண்டும்.

தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண்தன்மை சீரடையும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு தேன் அருந்த வேண்டும்.

தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும்.

கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.

சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.

தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அரிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.

Oru Muga Rudhraksham

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *