செரிமானத்தை தூண்டும் கரும்பு

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கரும்பின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம்.கரும்பு பற்கள், ஈறுகளுக்கு பலம் கொடுக்க கூடியது. இது, சத்தூட்டமான பானமாக விளங்குகிறது. கால்சியம், இரும்பு, வைட்டமின் சி சத்துக்களை உள்ளடக்கியது. உடலில் நீர்ச்சத்து குறையும்போது அதை சமன் செய்கிறது. உள் உறுப்புகளை தூண்டக்கூடியது. இதயத்துக்கு இதம் தரவல்லது. நுரையீரலுக்கு பலம் தருகிறது. வயிற்று புண்களை ஆற்றும். மலச்சிக்கலை சரிசெய்கிறது.

கரும்பு வேரை பயன்படுத்தி சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். கரும்பு வேர் ஒருபிடி அளவுக்கு சுத்தப்படுத்தி எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி ஓரிரு முறை குடித்துவர சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், சிறுநீரோடு ரத்தம் கலந்து வெளியேறுதல், சிறுநீர் சரியாக செல்லாதது போன்ற பிரச்னைகள் தீரும்.

வெண்கரும்பு, செங்கரும்பு ஆகியவை ஒரே மாதிரியான மருத்துவ குணங்களை கொண்டவை. கரும்பு சாறை பயன்படுத்தி உடல் எரிச்சலை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். 20 முதல் 30 மில்லி அளவுக்கு கரும்புச்சாறு எடுக்கவும். இதனுடன் தயிர் சேர்த்து கலந்து ஓரிரு முறை குடித்துவர உடலில் ஏற்படும் எரிச்சல், உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சல் குணமாகும்.

30 மில்லி அளவு கரும்புச்சாறுடன் அரைமூடி எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீர்விட்டு கலந்து குடித்துவர நீர்ச்சத்து குறைபாடு நீங்கும். உடலுக்கு பலம் தரும். சுறுசுறுப்பை கொடுக்கும். செரிமானம் ஏற்படும். உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். மூளை செயல்பாட்டை அதிகரிக்கும். பல்வேறு நன்மைகளை கொண்ட கரும்பு, பித்தசமனியாக விளங்குகிறது. உள்ளங்கை, காலில் ஏற்படும் எரிச்சல், உடல் வறண்ட தன்மை, அதிக உஷ்ணத்தால் உடல் எரிச்சல் பிரச்னைகளுக்கு கரும்புசாறு மருந்தாகிறது.

கரும்பு சாறு ஆரோக்கியம் தரும் பானமாக விளங்குகிறது. வயிற்றுபோக்கு, அதிக சிறுநீர், வியர்வை வெளியேறுவது போன்றவற்றால் நீர்சத்து குறையும். இப்பிரச்னைக்கு கரும்பு அற்புதமான மருந்தாகி பயன்தருகிறது. செரிமானத்தை சீர்செய்கிறது. உடலுக்கு குளிர்ச்சி தரும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை சரிசெய்யும். வயிற்று புண்களை ஆற்றும். கரும்பை மென்று திண்பதால் பற்கள், ஈறுகள் பலம் பெறும். கரும்பை நசுக்கி பசையை புண்களில் கட்டி வைப்பதால் புண்கள் விரைவில் குணமாகும். நாட்டு சர்க்கரையை பயன்படுத்தி முகப்பருக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் சிறிது தேன் மெழுகு போடவும். இதில், நாட்டு சர்க்கரை சேர்த்து பாகுபதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து முகப்பரு மீது பூசிவர முகப்பரு மறையும்.பல் வலி, பல் கூச்சத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இதற்கு லவங்கப்பட்டை மருந்தாகிறது. லவங்க பட்டையை பொடியாக்கி, இதனுடன் தேன் கலந்து பூசிவர பல் கூச்சம், பல் வலி, ஈறுகள் வீக்கம் பிரச்னைகள் சரியாகும்.

 

Special Thazhampoo Kumkum 100g

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *