நாக்கின் நிறத்தை வைத்து நம் உடலில் உள்ள பிரச்சனையை கண்டறிய..

நாம் உண்ணும் உணவின் சுவையை அறிய உதவுவதும் நாக்குதான். அதற்கு உதவும் வகையில் நாக்கில் ‘சுவையுணர்வு ஏற்பிகள்’ ஏராளமாக உள்ளன. இவை இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு ஆகிய நான்கு அடிப்படைச் சுவைகளை நமக்குஉணர்த்துகின்றன.

நாக்கைச் சுத்தமாக வைத்துக் கொள்ளத் தவறினால் பாக்டீரியா, வைரஸ், ‘கான்டிடா ஆல்பிகன்ஸ்’ எனும் பூஞ்சை போன்ற
தொற்றுக் கிருமிகள் நாக்கைப் பாதிக்கும். அப்போது நாக்கில் புண்கள் வரும்.
நம்முடைய நாக்கின் நிறத்தை வைத்தே நம் உடலில் உள்ள பிரச்சனை என்ன என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும்.
நாக்கு என்ன நிறத்தில் இருந்தால் உடலின் எந்த பாகங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள். நாக்கு அடர் சிவப்பு நிறத்தில் இருந்தால் உடலில் ஏதேனும் தொற்றுநோய் மற்றும் அலர்ஜி இருப்பதாக அர்த்தம்
மஞசள் நிறத்தில் நாக்கு இருந்தால் வயிறு அல்லது கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கும்.

மஞ்சள் காமாலையாகவும் இருக்கலாம்.காபி நிறப் படிவு போல் நாக்கு இருந்தால் நுரையீரல் பாதிப்பு உண்டாக வாய்பபுண்டு.
நாக்கு ரோஸ் நிறத்தில் இருந்தால் அவர்களுடைய உடல் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறது என்று பொருள். இளம்சிவப்பு நிறத்தில் இருந்தால் இதயம் மற்றும் ரத்த சம்பந்தமான நோய் இருக்கலாம்.
நாக்கு நீல நிறத்தில் இருந்தால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கும். இவையெல்லாம் நமக்கு நம்முடைய உடல் பற்றி நமக்கு உணர்த்துகிற அறிகுறிகள் தான்.
வெளிர் வெள்ளை நிறத்தில் நாக்கு இருந்தால் உடல் நீர் வற்றி நுண் கிருமிகளால் காய்ச்சல் உண்டாகும் என்று பொருள். சிமெண்ட் நிறத்தில் நாக்கு இருந்தால் செரிமானம் மற்றும் மூல நோய் இருக்கும்.
நாக்கில் வெள்ளை நிறத்தில் சீஸ் போன்று படிவம் படர்ந்திருந்தால் வாயில் ஈஸ்ட் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம். இந்த வாய் ஈஸ்ட் தொற்று ஏற்படுவது, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமைக் குறைகிறது என்பதற்கான அறிகுறி. இதனால் ஆன்டி-பயாட்டிக் உணவுகள் அதிகம் உட்கொள்ள வேண்டியது
http://tmpooja.com/shop/pooja-vastram-cotton-vastram/pooja-vastram-orange-color/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *