நீங்கள் ஆரோக்கியமாக இல்லை என்பதற்கான 7 அறிகுறிகள்!

நம்மால் நமது உடல் உள்ளுறுப்புகளை காண முடியாது. அதனால் அதனை கண்டுகொள்ளாமல் அவற்றில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால்தான் மருத்துவரிடம் சென்று ஸ்கேன், எக்ஸ்ரே போன்றவ்ற்றில் கண்டு தகுந்த சிகிச்சை அளிக்கிறோம்

ஆனால் நமது உடல் புத்திசாலித்தனமானது. பிரச்சனைகளின் அறிகுறிகளை நமக்கு தெரியப்படுத்திக் கொண்டேயிருக்கும். நாம்தான் பணம், வேலை என அதனை உதாசீனப்படுத்தி அதன் பின் வருந்திக்கொண்டிருக்கிறோம்.

உங்கள் உடலில் பிரச்சனைகள் ஆரம்பிக்குமுன் உடல் சில அறிகுறிகளை தருகிறது அவை என்னவென்று பார்ப்போமா?

மோசமான சருமம் :

சருமத்தின் தரத்தில் உங்கள் ஆரோக்கியம் தெரிந்துவிடும். நல்ல பளபளக்கும் (பியூட்டி பார்லர் செல்லாமலே) மின்னும் சருமம் பெற்றிருந்தால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
நிறைய காய், பழங்கள், நல்ல மன நிலை இரண்டுமே சருமத்தில் பொலிவை தரும்.

முகப்பரு எல்லாருக்கும் வருவதுதான். அது பிரச்சனையில்லை. ஆனால் திடீரென கொப்புளங்கள், சருமம் ஆங்காங்கே சிவப்பது, அல்லது உடல் முழுவதும் கரும்புள்ளிகள் உண்டானால் உங்கள் உடலில் ஏதோ பாதிப்பு உண்டாகியிருக்கிறது என அர்த்தம்.

ஊறல், அரிப்பு , உண்டானாலும் ஜீரண மண்டல்த்தில் ஏற்படும் கோளாறாக இருக்கலாம்.

காலைக் கடன் :

நீங்கள் தவறாமல் காலைக் கடன் கழிக்கிறீர்களா? அதே போல் சிறு நீர் வெளி மஞ்சள் நிறத்தில் நாற்றம் இல்லாமல் இருக்க வேண்டும். என்றாவது ஒரு நாள் இருக்கலாம்.
ஏனெனில் சில உணவுப் பொருட்கள் நாற்றம் உண்டாக்குபவை. ஆனால் எப்போதுமே நாற்றம் இருந்தால் தொற்று அல்லது வயிற்றில் பூச்சி இருக்கக் கூடும். அதுதவிர வேறு பிரச்சனைகளும் இருக்கலாம்.

உதடு காய்ந்து போகிறதா?

உங்கள் உதடு குளிர்காலத்தில் ஈரப்பதமின்மையால் வறண்டு போகக் கூடும். ஆனால் எல்லா பருவத்திலும் எப்போதும் உங்கள் உதடு வறண்டு, பிளவு ஏற்பட்டால் பிரச்சனை இருக்கிறது என அர்த்தம். விட்டமின் குறைப்பாட்டினால் இவ்வாறு உண்டாகும்.

நகங்கள் :

உங்கள் நகங்கள் உடலில் உண்டாகும் பிரச்சனைகளை அப்படியே காண்பிக்கும். நகங்களில் நிற மாற்றம், உப்புதல், அல்லது வேற ஏதாவது மாற்றம் தெரிந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

சில்லிடும் கைகள் :

உங்கள் கை மற்றும் பாதம் எப்போதும் சில்லிட்டு இருந்தால் இதய நோய்களின் அறிகுறிகளாக இருக்கலாம். போதிய ரத்தம் இதயத்திற்கு கிடைக்காமல் இருக்கும்போது அல்லது ரத்த ஓட்ட பாதிப்பு இருந்தால் இவ்வாறு உண்டாகும்.

தூக்கம் சரியாக வருகிறதா?

பொதுவாக உடல் களைப்பாக இருக்கிறது. ஆனால் தூக்கம் வருவதில்லை. எந்த வித மன அழுத்தமும் இல்லை.
ஆனால் தூக்கம் வருவ்தில்லை என்றால் நீங்கள் உங்கள் சக்தியை போதிய அளவு அன்று செலவழிக்க வில்லை அல்லது சாப்பிட்ட உணவோ, அதிக காய், டீ யோ காரணம். என்று அறியலாம்.
ஆனால் மேலே சொன்ன எந்த காரணமுமில்லை. ஆனால் தூக்கம் வருவ்தில்லை என்று சொன்னால் உங்கள் ஹார்மோன் சம நிலையில்லாமல் இருந்தால் இந்த பிரச்சனை உண்டாகும். மருத்துவரிடன் சென்று தகுந்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது

குழப்பமான மன நிலை :

சரியாக முடிவு எடுக்க முடியாமல் திணறுதல், எல்லாவ்ற்றிற்கும் குழப்பன் என இருப்பது ஆரோக்கியமான விஷயமல்ல. உங்கள் மூளைக்கும், செயல்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதேபோல், உடல் பருமன் மற்றும் அதிக கொழுப்பு உங்கள் மூளை செயல்திறனை பாதித்து இவ்வாறு ஏற்படுத்தும். ஆகவே உங்களின் இந்த மன நிலைக்கு உங்கள் உடல் பருமனும் காரணமாக இருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *