பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்!

1. பொதுவாக தரையில் பாய் விரித்து நாம் தரையில் உறங்குவதே ஒரு சிறந்த “யோகாசனம்” எனலாம்.

2. பிறந்த குழந்தைகளை பாயில் உறங்க வைப்பதால் அதன் முதுகெலும்பு நேர்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு இளம் வயது கூண் முதுகு விழுவதை தடுக்கிறது கல்வி கற்க்கும் மாணவ மாணவிகளுக்கு இளம் வயது முதுகுவலி வராமலும் தடுக்கும்.

3. கர்ப்பிணிப் பெண்கள் பாயில் உறங்குவது சுகப்பிரசவத்திற்கு உதவிடும் [பாயில் படுக்கையில் பெண்களுக்கு இடுப்பு எலும்பு விரிகிறது. இடுப்பு எலும்பு விரிந்தாலே ஆப்பரேசன் இல்லாத சுக பிரசவம்தான்.

4. மூட்டுவலி,முதுகுவலி,தோள்பட்டை தசை பிடிப்பு போன்ற பிரச்சினை உள்ளவருக்கு பாயில் உறங்குவதே ஒரு சிறந்த தீர்வாகும்.

5. பாயில் இரு கால் விரித்து மல்லாக்க படுக்கையில் உடலின் எங்கும் இரத்த ஓட்டம் சீராக பாய்கிறது. ஞாபக சக்தியை அதிகமாக தருகிறது பாயில் தலையணை இல்லாமல் உறங்குவதே சாலச் சிறந்தது.

6. ஆண்கள் பாயில் படுக்கையில் அவர்களின் மார்பகம் மற்றும் தசைகள் தளர்ந்து விரியும்.

7. பாய் உடல்சூட்டை உள்வாங்கக் கூடியது.

8. பெரியோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சீர்வரிசைசாமான்கள் கொடுக்கையில் பாய் இல்லாமல் ஒரு சீர்வரிசையே கிடையாது எனலாம்.

9. ஒரு பாய் மூன்று ஆண்டுகள் வரை அதன் தன்மையை இழக்காது.

10.கட்டிலில் விரித்து உறங்கும் பஞ்சு மெத்தையை விட வெறும் தரையில் பாய் விரித்து உறங்குவதால்…

உடல் உஷ்ணம் அடைவதையும்…உடலின் வளர்ச்சியையும்…ஞாபக சக்தியையும்…மன அமைதியையும்…நீண்ட உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் தருகிறது.

வெறும் தரையில் படுப்பதை விட பாய் விரித்து படுத்தல் நலம்.

 

http://tmpooja.com/shop/pooja-items-online-pooja/pooja-samagri-online-homa-items-online-door-delivery-free-shipping/almonds-badham/

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *