புற்றுநோய்க்கு புகையிலை மட்டும் காரணமா?

புற்றுநோய் என்பது ஒரு கொடிய வகை நோய். இந்த நோய் வந்துவிட்டால் கிட்டத்தட்ட மரணம் தான் என்ற நிலை உள்ளது. இந்த புற்றுநோய் பெரும்பாலும் புகைப்பிடிப்பதாலும், புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருப்பதாலும் வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் புகையிலையினால் மட்டுமின்றி வேறு பல நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களினாலும் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அவை என்னென்ன பொருட்கள் தெரியுமா?

மேலும் மது, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, மாய்ஸ்சரைசர்களில் இருக்கும் மினரல் எண்ணெய், மெர்குரி அதிக அளவில் உள்ள அழகு க்ரீம்கள், பெண்கள் கண் இமைகளில் பயன்படுத்தும் மஸ்காரா, மக்னீசியம் சிலிகேட், ஆஸ்பெஸ்டாஸ் போன்ற மூலப்பொருட்கள் கலந்த டால்கம் பவுடர், உடல் நாற்றத்தை போக்குவதாக கூறப்படும் டியொடரென்ட், இமிடாசோலிடினைல் யூரியா கலந்த நெயில்பாலிஷ், தலைமுடிக்கு அடிக்கும் ஸ்பிரே, லிப்ஸ்டிக் ஆகியவைகளும் புற்றுநோயை வரவழைக்கும் காரணிகளாக உள்ளன.

இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் மட்டுமே புற்றுநோய் உள்பட அனைத்து நோய்களில் இருந்தும் தப்பித்து ஆரோக்கியத்துடன் வாழமுடியும்.

இன்றைய கம்ப்யூட்டர் உலகில் இயற்கையோடு இணைந்து வாழ்வது கொஞ்சம் கடினம்தான் என்றாலும் முடிந்தவரை முயற்சி செய்வதில் தவறில்லை.

 

ACD Om

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *