முரு‌ங்கை‌‌யி‌ன் ‌சிற‌ப்பு

Benefits : 

மரங்களில் முருங்கைக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. முருங்கைக் கீரையை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் எல்லா வகையில் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். முருங்கையில் காட்டு முருங்கை, தவசு முருங்கை, கொடி முருங்கை என மூன்று வகை உண்டு. இதில் காட்டு முருங்கை இலை மிகவும் கசப்புத் தன்மை கொண்டது. ஆனால் அதற்கு மருத்துவக் குணங்கள் மிக மிக அதிகம்.

பொதுவாக முருங்கையின் பூ மிகவும் சக்தி வாய்ந்தது. முருங்கைப் பூ சாப்பிட்டு வந்தால் ஆண்மைச் சக்தி அதிகரிக்கும். விந்தணு பெருகும். விந்தணு எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று சொல்பவர்கள் சாப்பிட்டால் விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும். நாய்க் கடி விஷத்தைப் போக்கவும் முருங்கை பயன்படும். கிட்னி தொடர்பான பிரச்சனைகளுக்கும் முருங்கை இலை முக்கியத்துவம் வாய்ந்தது. இரத்தக்கட்டு வீக்கத்திற்கு முருங்கை இலையை அரைத்துப் பூசினால் நீங்கும்.

முருங்கைப் பூ உடல் சூட்டைக் குறைக்கும், தலைவலியைக் குறைக்கும், கால் வலி, கழுத்து வலியையும் குறைக்கும். சளி தொந்தரவையெல்லாம் முருங்கைப் பூ நீக்கும். கண் பார்வைக்கு நல்லது. முருங்கை மர‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் ‌பி‌சி‌னை பதப்படுத்தி சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் நாக்குப் பூச்சிகளெல்லாம் வெளியேறிவிடும். அதனால் வீட்டில் முருங்கையை வளர்த்தால் எல்லா விதத்திலும் நல்லது. வாஸ்துப்படி முருங்கையை வீட்டின் முன்புறத்தில் வைக்கக்கூடாது. வீட்டின் பின்புறத்தில் வைத்தால் எல்லா வகையிலும் நல்லது கொடுக்கும்.
 http://tmpooja.com/shop/tm-pooja-vessels-kalpatharu-pooja-vessels-online-pooja-store-pooja-store-online-door-delivery-free-shipping/pooja-plate/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *