மூளையை பலப்படுத்தும் பாதாம் பருப்பு

பருப்பு வகைகளில் அரசன் என்று போற்றப்படுவது பாதாம் பருப்பைத் தான். நமது உடலுக்குத் தேவையானஅத்தனை சத்துக்களையும் தன்னகத்தே கொண்டுள்ள பாதாம், உடலையும் மனதையும் பலப்படுத்துகிறது.

பாதாம் பருப்பின் தாயாகம் மோராக்கோ ரோமானியர்கள் இதனை கிரேக்க பருப்பு என்று கூறுவார்கள் மோராக்கோ, இத்தாலி, பிரான்ஸ், போர்ச்சுகல, கலிபோர்னியா, ஆஸ்திரேலியா, வட ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய கண்டத்தின் பல பகுதிகளில் இது விளைகிறது. இந்தியாவை பொருத்தமட்டில் காஷ்மீர் மற்றும் இமாசலப் பிரதேசத்தில் அதிகமாக விளைகிறது.

கொட்டை பருப்பு வகைகளில் முதன்மை இடம் பிடிப்பது பாதாம் பருப்பு தான். இதனுடைய மருத்துவ குணங்கள் அனைத்தும் இதில் உள்ள செம்புச் சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் பி1 இவற்றைப் பொறுத்து அமைகின்றன.

அதிக சக்தியை கொடுப்பதால் இது இரத்த சிவப்பணு உற்பத்திக்கு மிகவும் உதவுகிறது. உடலில் உள்ள மற்ற அணுக்களின் உற்பத்திக்கு புதுப்பித்தலுக்கு இது உதவுகிறது இருதயம், கல்லீரல்,   மூளை மற்றும் நரம்பு செயல்பாடுகளுக்கு மிகவும் உதவி புரிகிறது.

100 கிராம் பாதாம் பருப்பில் உள்ள சத்துக்கள்:

புரதச் சத்து          – 19.5 கி
வைட்டமின் ஏ – 2.0
வைட்டமின பி1 (தையமின்) – 0.19 மி.கி
ரிபோபிளேவின் பி2 – 1.4 மி.கி
நியாசின் பி3         – 3.9 மி.கி
பேன்டோதினிக் பி5 அமிலம் – 0.47 மி.கி
வைட்டமின் பி6 – 0.14 மி.கி
போலேட்         – 29
வைட்டமின் ஈ – 26.2 மிகி
கால்சியம்         – 250 மி.கி
இரும்புச்சத்து –  3.9 மி.கி
மெக்னீசியம்         – 260 மி.கி
மேங்கனீசு         – 2.29 மி.கி
பொட்டாசியம் – 740 மி.கி
சோடியம்         – 5.0 மி.கி
ஜிங்க்         – 3.7 மி.கி
மொத்த கலோரி மதிப்பு – 598
மூளைச் சோர்வை தடுக்க, ஞாபக சக்தி அதிகரிக்க:

நினைவாற்றல் என்பது மனிதர்களுக்கு முக்கியமான ஒன்று. ஞாபக மறதி நம்மில் பலரையும் வாட்டுகிறது. பாதாம்பருப்பில் காணப்படும் பாஸ்பரஸ் ஒமேகா -3 மற்றும் ஓமெகா-6 கொழுப்பு அமலங்கள் மூளையை பலப்படுத்தி நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது. மூளையை புத்துணர்ச்சியடையச் செய்கிறது.

நீரழிவு நோயாளிகளுக்கு:

நமது உடலில் இன்சுலின் என்ற தாது உப்பு குறைவதால் நீரழிவு நோய் உண்டாகிறது. இன்சுலின் முறையாக சுரப்பிக் குரோமியம் தேவைப்படுகிறது. இந்த துரோமியம் சத்து பாதாம் பருப்பில் நிறைந்துள்ளது. இது இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்து நீரழிவு நோயை கட்டுப்படுத்துவதுடன் நீரழிவு நோய் வராமலும் தடுக்கிறது.

மலச்சிக்கல் நீங்க:

மலச்சிக்கலே ஆதி நோய் மற்றவையெல்லாம் மீதி நோய் என்பது பழமொழி. மலச்சிக்கல் நோய் நம்மில் பலரிடமும் உள்ளது. இதனால் உடலில் வாயுக்கள் அதிகப்பட்டு மூட்டுவலி போன்ற உபாதைகள் உண்டாகிறது. மலச்சிக்கல் நீங்க பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து மேல் தோலை நீக்கி உண்ண வேண்டும். பாதாம் பருப்பி; காணப்படும் நார்ச்சத்து மலச்சிக்கல் நோய் குணமாக உதவுகிறது.

எலும்புகளின் வளர்ச்சிக்கு:

வளரும் குழந்தைகளுக்கு எலும்பு வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் முறையாக கிடைக்கப் பெறாமல் குள்ளமாக காணப்படுவார்கள். இதனை போக்க தினமும் குழந்தைகளுக்கு பாதாம்பருப்பு உண்ண தரலாம். பாதாம்பருப்பில் காணப்படும் பாஸ்பரஸ{ம், கால்சியமும் இதற்கு பெரிதும் உதவுகிறது.

ஆண்மை பெருக:

பாதாம்பருப்பு 10 எடுத்து நீரில் நன்றாக ஊறவைத்து மேல் தோலை நீக்கி பாலில் அரைதது தேன் அல்லது சர்க்கரை கலந்து இரவு படுக்கைக்கு செல்லும் முன் பருகி வர ஆண்மை பெருகும்.

சுவாச கோளாறுகளை தடுக்க:

பாதாம்பருப்பில் காணப்படும் புரதச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து உடலை பாதுகாக்கினறது.

தோல் நோய்கள் குணமாக:

பாதாம்பருப்பில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மஞ்சள் நிறத்தில்இருக்கும். பாதாம் எண்ணெய் தாது; பொருட்கள், வைட்டமின்கள், புரதம், கொழுப்பு சத்துக்கள் கொண்டுள்ளது.

எல்லாவித சருமத்திற்கும் ஏற்றது. உடலில் தோல் உலர்ந்து போதல், அரிப்பு, அழற்சி போன்றவற்றை பாதாம் எண்ணெய் நீக்குகிறது.

சோரியாஸிஸ், எக்சிமா போன்ற நோய்களுக்கும், தீப்புண்களுக்கும் பாதாம் எண்ணெய் சிறந்த மருந்தாகும்.

புற்றுநோய் வராமல் தடுக்க:

பாதாம்பருப்பில் உள்ள புற்று நோய் தடுப்பு பொருட்கள் (ஆன்டி அக்சிடன) புற்று நோய் செல்களை அழிக்கிறது. மேலும் வளர விடாமல் தடுக்கிறது.

 

Almonds (Badham)

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *