வெண்ணீரில் இவ்ளோ நன்மைகள் இருக்கா !

 நன்மைகள்:

பொதுவாக நகரங்களில் குறிப்பாக ஐடி நிறுவனங்களில் பணிபுரிவோர் குளிர்ந்த நீரை (ஐஸ் வாட்டர்) அருந்துவதை ஒரு பேஷனாக வைத்திருக்கிறார்கள். ஆனால் சுடுதண்ணீர் எனப்படும்வெந்நீர் அருந்துவதன் மூலம் பல்வேறு பலன்கள் உள்ளன.

சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால் வாயுத் தொல்லையே இருக்காது

அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.

வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.

வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான வெந்நீரை கொஞ்சம் கொஞ்சமாகக் குடிப்பது நல்லது.

நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால் சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.

மிருதுவான சருமம் பெற பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.

கால்கள் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு வாளியில் விட்டு அதில் கல் உப்பையும் போட்டுக் கலந்து அந்த வெந்நீரில் கால் பாதங்களை 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.

பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.

தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால் உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.
சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

Vedha Palm Candy 100g

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *