உஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி

பயன்கள்:

சப்பாத்திக்கள்ளி இது ஒரு பாலைவனத்தாவரம் வறண்டபகுதியில் செழித்து, வளர்ந்து காணப்படும் ஒருவகை தாவரம்தான் சப்பாத்திக்கள்ளி. நமது இரத்தத்தில் பலவிதமான செல்கள், கனிம, கரிமப்பொருட்கள் கலந்துள்ளன. இவை உறுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை தருவதுடன் செல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.

1.09 gms ப்ரோட்டீனும், 61 கலோரியும்,5.4 gms டயட்ரி பைபரும், 328 mg பொட்டாசியமும், 83 mg கால்சியமும்,36 mg பாஸ்பரசும்,127 mg மெக்னிசியுமும் ,0.45 mg அயனும், 7 mg சோடியமும்,வைட்டமின் A -64 IU,வைட்டமின் C – 20.9 mg,வைட்டமின்- B1 தையாமின் (thiamine) – 0.021 mgமேலும் சில வைட்டமின்கள் குறைந்த அளவில் உள்ளன

டிபன்ஸ் மெக்கானிசம் என்று சொல்லப்படும் செல்களின் தற்காப்பு செயலுக்கு இரத்த அணுக்கள் பெரிதும் உதவுகின்றன. உணவுப்பாதை, மூச்சுப்பாதை, தோல் போன்றவற்றின் வாயிலாக நமது உடலுக்குள் நுழையும் நுண்கிருமிகள் இரத்த அணுக்களுடன் சண்டையிடும் போது அழிந்துவிடுகின்றன. அல்லது இரத்த அணுக்களால் தூக்கியயறிப்பட்டு தோலின் வாயிலாக வெளியேற்றப்படுகின்றன.

இவை வியர்வை துவாரங்களை அடைத்து கட்டிகளை உண்டுபண்ணுகின்றன. அதுமட்டுமின்றி தோலின் வாயிலாக உடலுக்குள் செல்லும் நுண்கிருமிகளும் இரத்தத்தை சென்றடைய முடியாமல் தோலிலேயே தங்கி ஆரம்பத்திலேயே அழிக்கப்பட்டு தோலில் கட்டிகளாக மாறுகின்றன. இவ்வாறு தோன்றும் கட்டிகள் உஷ்ண கட்டிகள், பிளவை கட்டிகள் என பல வழக்கப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

ஒபன்சியா டிலேனி என்ற தாவரவியல் பெயர் கொண்ட கேக்டேசியே குடும்பத்தைச் சார்ந்த சப்பாத்திக்கள்ளியின் தண்டுகளே இலைகளாக மாற்றுரு கொண்டுள்ளன. இதன் இலைகளில் ஏராளமான அளவு நீர்ச்சத்தும், ஆர்பினோகேலக்டன், குர்சிட்டின் மற்றும் பிளேவனால்கள் போன்ற வேதிச்சத்துக்களும் காணப்படுகின்றன. இவை கிருமிகளை அழித்து இரத்தக் கட்டிகளை கரைக்கும் தன்மையுடையவை.

முட்களுள்ள சப்பாத்திக்கள்ளியின் இலைத்தண்டை பிளந்து, வெளிப்புறமுள்ள முட்களை நீக்கி, உட்புறமாக சிறிது மஞ்சளை தடவி, அனலில் வாட்டி, கட்டிகளின் மேல் இறுக்கமாக கட்டி வைத்து வர ஆரம்ப நிலையிலுள்ள கட்டிகள் விரைவில் உடைந்து புண் எளிதில் ஆறும். புண் ஆற தாமதமானால் மஞ்சளை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர விரைவில் குணமுண்டாகும்.

 

Amukkara Churanam

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *