என்றும் இளமையாக இருக்க உதவும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ள, இதப்படிங்க!

என்னென்ன உணவுகளை உண்ணலாம்?

பெர்ரி பழங்கள் : பெர்ரி பழங்கள் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகளைக் கொண்டுள்ளன. நார்சத்தும் இவைகளில் அதிகமாக கானப்படுகின்றன. தினமும் பெர்ரி பழங்கள் உண்டால் நச்சுக்கள் வெளியேறி, சருமம் கிளியராக இருக்கும். கண்ட ஜங்க் உணவுகளை உன்ணாமல் பெர்ரி பழங்கள் சாப்பிடுங்கள். மாற்றத்தை உணர்வீர்கள்.

Image result for பெர்ரி பழங்கள் படங்கள்

நட்ஸ் : நட்ஸ் அற்புதமான ஸ்நாக்ஸ் உணவாகும்.முந்தரி மற்றும் பூசணிக்காய் விதைகளில் தேவையான மினரல்கள் உள்ளன. செலினியம் மிக அற்புதமான ஆன்டி ஆக்ஸிடென்ட். அது விட்டமின் ஈ யுடன் சேர்ந்து கேன்ஸர் செல்களை விரட்டியடிக்கும் சக்தி கொண்டது. இவை அனைத்தும் எல்லா வகையான நட்ஸ்களில் உள்ளன. மாலையில் கொறிக்க நட்ஸ்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒட்டிய கன்னங்கள் கொண்ட வறட்சியான சருமம் நீங்கள் கொண்டிருந்தால், உங்கள் சருமத்தில் மிருதுதன்மை நாளடைவில் அதிகரிப்பதை நீங்கள் காண்பீர்கள்.

Image result for நட்ஸ் படங்கள்

நீர்: எங்கும் எப்போது எளிதில் கிடைக்கக் கூடியது நீர்தான். தவறாமல் நீர் குடிக்கும் பழக்கத்தை எற்படுத்திக் கொள்ளுங்கள். சில சமயம் நாம் நீர் குடிப்பதையே மறந்து விடுகிறோம். தாகம் வந்தால் தவிர நீரினை கண்களால் கூட பார்ப்பதில்லை. இது மிகவும் தவறு. தாகம் வரும்வரை நீங்கள் விட்டிருந்தால், போதிய அளவு நீர்சத்து உங்கள் உடலில் இல்லை என்பதுதான் அர்த்தம். ஆகவே தாகம் வரும் வரை விடாதீர்கள். நச்சுக்க்களும் வேண்டாத கழிவுகளும் வெளியேற நீங்கள் நீர் கட்டாயம் குடித்தாக வேண்டும்.

Foods to eat for healthy skin

சிவப்பு திராட்சை : சிவப்பு திராட்சையில் நிறைய ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. இளமையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் இந்த சிவப்பு திராட்சைக்கு உள்ளது. விட்டமின் சி யில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்டை விட இந்த சிவப்பு திராட்சையில் 50 மடங்கு அதிகம் உள்ளது. அதேபோல் விட்டமின் ஈ யில் உள்ளதை விட 20 மடங்கு அதிகம் உள்ளது. தினமும் என்று இல்லாமல் வாரம் ஒரு தடவையாவது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

Foods to eat for healthy skin

காலே கீரை : காலே கீரை மிக மிகாற்புதமான பலன்களைக் கொண்டுள்ளது. வாரம் மூன்று முறையாவது உணவிலோ அல்லது ஜூஸாகவோ எடுத்துக் கொள்ளுங்கள்.உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே நம்ப மாட்டீர்கள். அவ்வளவு அற்புதத்தை இந்த கீரை தரும். சருமத்த்தின் திசுக்களில் ஏற்படும் பிரச்சனைகளை சீர் செய்து சரிபடுத்தி விடும். ஒரு புஷ்டியான தோற்றத்தை கொடுத்து இளமையாக தோன்ற வைக்கும்.

Foods to eat for healthy skin

 

Champa Flower Agarpattis

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *