குழந்தைகளுக்கான பிரத்யேக உணவு வகைகள்

Benefits : 

வளரும் குழந்தைகளுக்கு வளர்ச்சிக்கான சத்து மிகவும் அவசியம்.7 விதமான முக்கிய உணவு வகைகள் கீழே தரப்பட்டுள்ளன:-

  • ஓட்ஸ்: ஓட்ஸ் உணவு சாப்பிடும் குழந்தைகள் பள்ளியில் மிகுந்த கவனத்துடன் செயல்பட முடியும் என்று ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. நார்ச் சத்து நிறைந்த ஓட்ஸ் மெதுவாக ஜீரணமாவதால், முழந்தைகளுக்கு ஸ்டெடியாக சக்திதரவல்லது.
  • கீரை வகைகளில் இரும்புச் சத்து, கால்சியம். ஃபோலிக் ஆஸிட் மற்றும் வைட்டமின்கள் A மற்றும் C அடங்கியது. இவை எலும்பு வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் ஏற்றது. இதில் லேசான வாசனை கொண்டுள்ளது. விரைவில் சமைக்க முடியும். சூடான சூப்களிலும், தக்காளி ஸாஸிலும் இதனைச் சேர்க்கலாம்.
  • சர்க்கரைவள்ளிக் கிழங்கு: இது அளப்பரிய சத்து நிறைந்தது. இதில், பொட்டாஷியம், வைட்டமின்-C, நார்ச்சத்து,ஃபோலேட், வைட்டமின்-A  கால்ஷியம் மற்றும் இரும்புச் சத்து. இதன் அளப்பரிய சத்தை மனதில் கொண்டு, உருளைக் கிழங்குக்குப் பதில் இதனை உணவுகளில் சேர்க்கலாம். மசிக்கலாம். பலவித உணவுகளைத் தயாரிக்க முடியும்.
  • சதைப்பற்றுள்ள கனி வகைகள்(Berries) : ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெரி, மற்றும் ராஸ்பெரி போன்றவைகளில் பொட்டாஷியம், வைட்டமின்-C  நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் ஆன்டிஆக்ஸிட்கள் உள்ளன. மேலும், இவற்றில் மிகக் குறைந்த அளவே கொழுப்புச் சத்துள்ளது. கொலஸ்ட்ரால் அறவே கிடையாது. பெரி வகைகள் இனிப்பாக இருப்பதால், இவற்றை குழந்தைகள விரும்பிச் சாப்பிடுவர். பெரி வகைப் பழங்களை ஓட்ஸிலும் சேர்த்தும் கொடுக்கலாம். இத்துடன், ஓட்ஸ், தயிர் முழுப் பயிறு வகைகளைக் கலந்து தயாரிக்கும் உணவுகள்  அதிகப்படியான வைட்டமின்மகளைத் தரும்.
  • முட்டை:-முட்டையிலுள்ள அபரிதமன புரதச் சத்து மிக நல்ல உணவாக அமைகிறது. புரதத்தைத் தவிர ஒரு டஜனுக்கும் மேற்பட்ட வைட்டமின்களும்  தாதுக்களும் நிறைந்துள்ளன. அது தவிர  இளம் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான, அபரிதமான ‘கோலின்’ என்னும் உயிர்ச் சத்தும் நிறைந்தது. முட்டையை வேகவைத்தோ, பொறியலாகவோ செய்து கொடுக்கலாம்.
  • தயிர்:- கால்ஷியமும் அதிகளவு புரதமும் கொண்ட தயிரானது, உறுதியான எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவும். மேலும், ஜீரணத்துக்கும் உதவுகிறது. குடலிலுள்ள கெட்ட கிருமிகளையும் அழிக்கிறது. தயிரை ஃப்ரெஷ்ஷான பழங்களுடன் சேர்த்தும் கொடுக்கலாம்.
  • துளசி:- இந்த மூலிகையில் நிறைய ஆன்டிஆக்ஸிடன்டுகள் மற்றும் வைட்டமின் A, C மற்றும் K  உள்ளன. மேலும், இரும்புச் சத்து, பொட்டாஷியம் மற்றும் கால்ஷியம் நிறைந்துள்ளது. ஜீரண சக்தியைத் தூண்டுகிறது. துளசி, தலைவலியைப் போக்கும் ஆற்றலுடையது என்று சில ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது. நீங்கள் பாஸ்தா செய்யும்போது, அதில் துளசி இலையை அரைத்துக் கலந்துவிட்டால், குழந்தைகளுக்குத் தெரியாமல், அவற்றை குழந்தைகளின் உணவில் சேர்த்தமாதிரி இருக்கும்

 

Brass Dabara Set

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *