தினமும் ஒரு துண்டு இஞ்சியை சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகள் இருக்கா!

பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள இஞ்சியின் சுவை சிலருக்கு பிடிக்காது. அதனால்,சிலர் இஞ்சியை தங்களின் உணவுகளில் சேர்த்துக் கொள்ள யோசிப்பர். ஆனால் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். சரி வாங்க, இஞ்சியை ஏன் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

Ginger benefits side effects

இஞ்சி காரமான சுவையுடையது. இதனை தேநீருடன் சேர்த்து குடிப்பது மிகவும் நல்லது. அதிலும், காலை வேளையில் இஞ்சி கலந்த டீ குடிப்பது, காய்ச்சலுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.

காய்ச்சலைத் தடுக்க

Fever Vomiting Cold Cough

இஞ்சி டீ குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று முன்பே கூறியுள்ளது போல், இஞ்சி காய்ச்சலில் இருந்தும் விடுபட உதவி புரிகிறது. குளிர்காலம் அல்லது மழைக்காலத்தில் ஏற்படும் காய்ச்சலைத் தவிர்க்க விரும்புகிறீர் எனில், நீங்கள் தினமும் இஞ்சி டீயை அருந்துங்கள்.

​மாதவிடாய் வலியைப் போக்க

periods pain menstrual pain

​மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலியைப் போக்க பல மருந்துகள் உள்ளன. அவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை எனில், இஞ்சியை முயற்சி செய்து பாருங்கள். இஞ்சி தசைப் பிடிப்பைக் குறைக்க உதவும். அதோடு, மாதவிடாய் காலத்தில் உங்களை நன்றாக உணரச் செய்யவும் உதவும்.

நீரிழிவு நோயைத் தடுக்க

Diabetes Sugar Low Diabetes

ஆரோக்கியமற்ற உணவு, உடற்பயிற்சியின்மை போன்றவற்றால் ஏற்படும் நீரிழிவு நோயைத் தடுக்க நீங்கள் இஞ்சியை உபயோகிக்கலாம். நீரிழிவு நோயைத் தடுக்கவும், நீரிழிவு நோயின் ஆபத்துகளை குறைக்கவும் இஞ்சி உதவுகிறது.

ஒற்றைத் தலைவலியைப் போக்க

Headache headpain

பொதுவாகவே தலைவலியைப் போக்க நாம் எல்லோரும் முதலில் டீ தான் அருந்துவோம். அதிலும் இஞ்சி கலந்த டீயை அருந்துவது, எந்த மருந்து எடுத்துக் கொண்டாலும் தீராத வலியைக் கொடுக்கும் ஒற்றைத் தலைவலியைப் போக்கும் வலிமை கொண்டது. தலைவலியைப் போக்கி உங்களை சுறுசுறுப்பாகவும் மாற்ற இஞ்சி கலந்த டீயை எடுத்துக் கொள்ளலாம்.

மூட்டுவலியைப் போக்க

knee pain squatting

பல வயதான பெரியோர்களை வேதனைக்குள்ளாக்கும் வலி எது எனில் அது மூட்டு வலி தான். மூட்டு வலியைப் போக்க பல மருந்துகளை உங்களது மருத்துவர் பரிந்துரைத்தாலும், நீங்கள் சாப்பிடும் உணவில் இஞ்சியை சேர்த்துக் கொள்வதன் மூலம் மூட்டு வலியைப் போக்க முடியும். அதுமட்டுமின்றி, இஞ்சி மூட்டு வலியைப் போக்கும் நிவாரணியாகவும் செயல்படும்.

இதயத்தைப் பாதுகாக்க

heart pain beat

இஞ்சியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால், இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். அதோடு, உங்கள் இரத்த ஓட்டத்தையும் சீராக்க உதவும். இரத்தக் குழாயில் அடைப்பு அல்லது இதயத்தில் அடைப்பு போன்ற பிரச்சனைகள் உங்களின் குடும்பத்தில் வேறு யாருக்கேனும் இருந்தால், அது மரபணு ரீதியாக உங்களுக்கும் வரும் வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுக்க நீங்கள் இஞ்சியை தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

சூப்புடன் இஞ்சி சேர்த்துக் கொள்ளுங்கள்

Vegetable soup healthy

இஞ்சியை ஒரு மசாலாவாகப் பயன்படுத்தலாம். நீங்கள் ஏதேனும் இறைச்சி உணவு செய்கிறீர் எனில், அதன் மீது சிறிது இஞ்சியை துருவி தூவினால் அதன் சுவை நன்றாக இருக்கும். அதேபோல், சாஸ்களிலும் இஞ்சியை பயன்படுத்தலாம். இஞ்சியை பயன்படுத்தும் போது அவை, அதிகமாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அதிகமாக இஞ்சியை சேர்க்கும்போது, உணவின் சுவையில் அதிகமாக இஞ்சி சுவை மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *