பிராய்லர் கோழியை விரும்பி சாப்பிடுகிறீர்களா? அப்போ உங்கள் கல்லீரல், கிட்னி, ஆண்மை அவ்வளவுதான்!

Benefits : 

குறிப்பாக ஆண்மை இழப்பிற்கும், பெண்கள் விரைவில் பூப்படைவதற்கும் நீங்கள் சாப்பிடும் பிராய்லர் கோழி மிக முக்கியமான காரணம் என்று அடித் துச்சொல்கிறது அந்த மெசேஜ்.

பிராய்லர் கோழிகள் கேன்சரை தோற்றுவிக்கிறது என்றும் அதிர்ச்சி தரு கிறது.கட்டாயம் படியுங்கள், பயனுள்ள பதிவு என்ற வேண்டுகோளோடு துவங்கும் அந்த மெசேஜில் “பிராய்லர் கோழிகள் 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்துவிடுகிறது. கோழிகளை வளர்ப்பதற்கு 12 விதமான கெமிக்கல்ஸ் அதற்கு கொடுக்கப்படும் உணவோடு கலந்து கொடுக்கப்படுகிறது. கோழிகளுக்கு நோய்கள் வரக்கூடாது என்பதற்காக அதிகளவு ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது.

இதனால் கோழிகளுக்கு வரும் நோயை குணப்படுத்த முடியாமல் போவதோடு, அந்த இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சி.எஸ்.இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

கோழிகள் அதிக சதையோடு வளர்வதற்கு பல்வேறு விதமான மருந்துகளை ஊசிகளின் மூலம் கோழிகளு க்கு செலுத்துகிறார்கள். அதனால் அதை உண்ணும் ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்கள் அழிக்கப் படுகிறது. பெண்குழந்தைகள் பத்து பதினோரு வயதிலேயே பருவமடைந்துவிடுகிறார்கள்.

பிராய்லர் கோழியின் சதையில் கெட்ட கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும் போது நம் உடலில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது, நமது கல்லீரலில் வீக்கத்தையும் ரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. 100ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

பிராய்லர் கோழியை சாப்பிடுவதால் சிறுநீரகங்ளிலும் கல்லீரலிலும் கேன்சர் நோய் மற்றும் குடல் புற்று நோயும் உருவாகிறதாம். இது தவிர மஞ்சள் காமாலை, இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதி களின் எண்ணிக்கையை அடுக்கலாம்.” என்றெல்லாம் அலர்ட் செய்யும் அந்த மெசேஜில் இன்னொரு தலை சுற்றவைக்கும் தகவலும் சொல்லப்பட்டிருக்கிறது.

“பிராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட காரணத் தால் நாமக்கல் பகுதி மக்களுக்கு புற்று நோய் பிரச்னை அதிகமாக பரவி வருகிறது. அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் முதலாளி களான சில அரசியல்வாதிகள், உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக் கொள்கின்றனர்” என்று முடிகிறது அந்த செய்தி.

மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவக்குழு உறுப்பினர் டாக்டர் புகழேந்தியிடம் பேசினோம். தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

“பிராய்லர் கோழிகளால் இது மாதிரியான பாதிப்புகள் ஏற்படுகிறது என்பது உண்மைதான். பிராய்லர் கோழிகளை பொறுத்தவரை இப்போது மிகப் பெரிய வியாபாரமாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அதனால் அது சத்தான பொருள் என்பதிலிருந்து வேறு வடிவத்திற்கு மாறி வருகிறது. பிராய்லர் கோழிகளை வளர்ப்பில் கோழிகளுக்கு நோய் வராமல் தடுப்பதற்கும், கால் மற்றும் வயிற்று பகுதிகள் அபரிதமான வளர்ச்சியடைவதற்கும், ஹார்மோன் ஊசிகள் என்று பல்வேறு வகையான ஊசிகளை போடுகிறார்கள், அதற்கு கொடுக்கப்படும் உணவுகளிலும் ரசாயணம் கலக்கிறார்கள். இது ஒவ்வொரு கோழிப்பண்ணைக்கும் வேறுபடும். தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

அப்படியான ஊசிகளும், உணவுகளின் மூலமும் வளரும் கோழி மனிதர்களுக்கு பல பிரச்னைகளை தோற் றுவிக்கிறது. முக்கியமாக இதுமாதிரியான ஹார்மோன் ஊசிகளை போடும்போது. ஆண்களுக்கு ஆண்மைக் குறைவும் பெண்களுக்கு சிறு வயதில் பூப்படைதல் என்று பிரச்னைகள் வந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் கோழிகளுக்கு அதிக அளவு ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை கொடுப்பதால் அதை சாப் பிடும் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதோடு பல்வேறு வகையான உடல் உபாதைகளை தோற் றுவிக்கிறது. இன்றைக்கு நாம் அதிக அளவு லெக் பீஸைத்தான் விரும்பி சாப்பிடுகிறோம்.

அமெரிக்க கம்பெனிகளும் லெக் பீஸைதான் நம்மிடம் முன்னிறுத்துகிறது. அதிலிருக்கும் அரசியல் மிக முக்கியமானது. கோழிகளின் கால்பகுதியில் அதிக அளவு கொலஸ்ட்ரால் கன்ட்டன்ட் இருக்கிறது. வயிற்று பகுதியில் குறைவாகத்தான் இருக்கிறது. அதனால்தான் அமெரிக்கர்கள் கோழிக்கால்களை சாப்பி டமாட்டார்கள். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கோழிக்கால்களை அவர்கள் வெறும் கழிவு பொருளாகத் தான் கருதுகிறார்கள்.

பெரிய பெரிய நிறுவனங்கள் விளம்பரங்களின் மூலம் நம்மை நம்மை கோழி கால்களுக்கு அடிமைப்படுத் திவிட்டார்கள். கோழிக்கறி என்றாலே லெக் பீஸ்தான் நம் நினைவுக்கு வருகிறது. அந்த லெக்பீஸ் நமக்கு மிக விரைவில் ரத்த அழுத்ததை ஏற்படுத்திவிடும். பிராய்லர் கோழிகளால் ஏற்படும் தீமைகளை super size என்கிற ஆவணப்படத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

நாட்டுக்கோழியின் முட்டையில் மஞ்சள் கரு அதிக மாகவும் வெள்ளைக்கரு குறைவாகவும் இருக்கும், பிராய்லர் கோழிகளில் வெள்ளைக் கரு அதிகமாக இருக்கிறது. இப்போதைக்கு பிராய்லர் என்பது மக் களின் ஊட்டச்சத்து சார்ந்ததாக இல்லை. வணிக நோக்கம் கொண்டதாகவே இருக்கிறது. பிராய்லர் கோழிகளால் இது மாதிரியான பிரச்னைகள் கட்டாயம் மனிதர்களுக்கு ஏற்படுகிறது” என்றவர் அதை எப்படி போக்குவது என்பதற்கான வழிவகைகளையும் அடுக்கினார்.

“இந்த நிலைமையை தவிர்க்க, கோழி வளர்ப்பை வெளிப்படையாக்க வேண்டும். இரண்டாவதாக ஒவ்வொரு கோழியையும் பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும். பிராய்லருக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் போல நாட்டுக்கோழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கலாம்” என்றார்.

http://tmpooja.com/shop/pooja-items-online-pooja/pooja-samagri-online-homa-items-online-door-delivery-free-shipping/honey/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *