லஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கியம் தெரியுமா?

பலன்களும் சத்துகளும்

இதில்  கால்சியம், வைட்டமின் பி 12, துத்தநாகம், புரோட்டீன் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துகள் நிறைவாக உள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தி

பொதுவாகவே பால் பொருட்கள் உடலுக்கு நன்மைசெய்யும்  பாக்டீரியாக்களை அதிகரிக்கக்கூடிய புரோபயாட்டிக்ஸ் (Probiotics) நிறைந்த உணவுகள். இவை, வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதுடன், நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கவும் உதவும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

செரிமானம்

லஸ்ஸியில் உள்ள ஊட்டச்சத்துகள் செரிமானத்துக்கு தேவையான என்சைம்களை அதிகரித்து, செரிமானத்துக்கு உதவும். உடலின் ஜீரண சக்தியை  பலப்படுத்தும்.

வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்

மலச்சிக்கல், வயிற்றுப் புண், வயிறு உப்புசம் உள்ளிட்ட வயிற்று உபாதைகளைச் சரியாக்கும்.

பற்கள், எலும்புகளை வலுவாக்கும் 

லஸ்ஸியில்  கால்சியம் அதிக அளவில் உள்ளது. இது நம் எலும்புகளும் பற்களும் வலிமையாக உதவுகிறது. மேலும், எலும்பு தேய்மானம் போன்ற நோய்கள் வருவதையும் தடுக்கிறது.

உடனடி எனர்ஜி

வைட்டமின் பி 12 ரத்தத்தில் உள்ள குளூக்கோஸை ஆற்றலாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் வைட்டமின் பி 12 இருப்பதால், ஒரு டம்ளர் லஸ்ஸி குடித்தால் உடனடி ஆற்றல் கிடைக்கும். தொடர்ச்சியாக, லஸ்ஸி சாப்பிட்டு வந்தால், வைட்டமின் பி 12 (Vitamin B12 Deficiency) குறைபாட்டு நோய் நீங்கும்.

தசைகளை வலிமையாக்கும்

லஸ்ஸியில் புரோட்டீன் நிறைவாக உள்ளது.  இது தசைகளை வலிமையாக்கும். உடற்பயிற்சி செய்கிறவர்கள், பாடி பில்டர் போன்றவர்களுக்கு சிறந்த ஊட்டச்சத்து உணவு.

கோடைகால நோய்களை நீக்கும்

கோடைகாலத்தில்  வெப்பத்தால் ஏற்படும் வியர்குரு, இரைப்பை (Gastro Intestinal) நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

உடலுறவில் நாட்டம் உண்டாகும்

லஸ்சியில் உள்ள ஊட்டச்சத்துகளுக்கு  உடலுறவில் நாட்டம் உண்டாக்கும் சக்தி இருக்கிறது. புரோபயாட்டிக்ஸ் உணவு என்பதால், ஆண்மைக்குறைவைத் தடுக்கவும் உதவும்.

 

Brass Dabara Set

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *