நீங்க கவலையா இருக்கீங்களா.?அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க..!

பெருகி வரும் ஃபாஸ்ட் புட் கலச்சாரத்தால், மக்களின் உடல் எடை மட்டுமல்லாமல் மன அழுத்தமும் கூடுகிறது. உங்கள் மன அழுத்ததை போக்கி மகிழ்ச்சியை அளிக்கும் ஐந்து முக்கிய உணவுப் பொருட்களை பற்றி பார்க்கலாம்.

#வாழைப்பழம்
வாழைப்பழத்திலுள்ள பொட்டாசியம் , இரத்த அழுத்ததை சீர்ப்படுத்தி இரத்த்த்திலுள்ள உள்ள சர்க்கரையின் அளவை சமன்படுத்துகிறது. வாழைப்பழத்திலுள்ள கார்போஹைட்ரேட் உடல் சோர்வை போக்கி புத்துணர்ச்சி அளிக்கக்கூடியவை. இவை நரம்புகளைத் தூண்டும் செரட்டனின் ரசாயனத்தை சுரக்க செய்வதால் நாள் முழுவதும் நாம் புத்துணர்ச்சியாக இருக்கலாம்.

Image result for நீங்க கவலையா இருக்கீங்களா.?அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க..!

#ஓட்ஸ்
ஓட்ஸில் விட்டமின் பி’ நிறைந்துள்ளதால் உடலுக்கு புத்துணர்வு கூட்டுகிறது. இதிலுள்ள நார்ச்சத்துகள் உடலிலுள்ள தேவையில்லாத கொழுப்புகளை கரைக்க உதவுவதடன் இதயம் சார்ந்த நோய்களை வரவிடாமல் தடுக்கிறது. மற்றும் ஓட்ஸில் உள்ள பைட்டோகெமிக்கல் அமிலம் மன அழுத்ததை போக்கி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

Image result for நீங்க கவலையா இருக்கீங்களா.?அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க..!

#முந்திரிபருப்பு
உடனே புத்துணர்ச்சி பெற முந்திரிபருப்பு ஒரு உடனடி தீர்வாகும். இதிலுள்ள மெக்னீசியம் மற்றும் டிரிப்டோடன் உடலுக்குத் தேவையான உற்சாகத்தை உடனே தருகின்றன. முந்திரிபருப்பிலுள்ள ஜிங்க்’ என்ற வேதிப்பொருள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

Image result for நீங்க கவலையா இருக்கீங்களா.?அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க..!

#கோகோ சாக்லேட்
கோகோ சாக்லேட் என்ற இந்த கருப்பு சாக்லேட்கள் மிகச் சிறந்த ஆக்ஸியாடண்ட்களாக உள்ளன. ஒரு கடி சாக்லேட்டு, உடலிலுள்ள செரட்டின் மற்றும் எண்டர்ஃபின் வேதிப்பொருளை அதிகரிக்கச் செய்து உடலுக்கு உற்சாகமூட்டுகிறது. உங்கள் மூளையை சுறுசுறுப்பாக்குவதில் கோகோவுக்கு நிகர் வேறில்லை.

Image result for நீங்க கவலையா இருக்கீங்களா.?அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க..!

#கீரின் டீ
கீரின் டீ என்றழைக்கப்படும் இந்த மூலிகைத் தேனீர் மன அழுத்ததை குறைக்க உதவுகிறது. இது சோர்ந்து போன நரம்புகளை தளர்வு செய்து, மூளையை சுறுசுறுப்பாகிறது.

நீங்க கவலையா இருக்கீங்களா.?அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க..!

 

 

Ojasvita Chocolate Flavour

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *