அற்புத மருத்துவ குணங்களை கொண்ட வெப்பாலையின் பயன்கள்…!

Benefits :

1. வெப்பாலை மருந்தாக பயன்படுகிறது. வெப்பாலை மரப்பட்டைச் சூரணம் ஓரிரு தேக்கரண்டி எடுத்துத் டீ நீராகப் பருகுகிறபோது பல்வேறு வயிற்று நோய்களைத் தணிப்பதாகவும் பயன் தருகிறது.
2. வெப்பாலை மரப்பட்டைச் சூரணத்தோடு 10 மிளகும் சுவைக்கென பனங்கற்கண்டும் சேர்த்து பருகும்போது, சருமநோய்களை விரைந்து குணப்படுத்துவதோடு காயங்கள் எவ்விதத்தினால் ஆயினும் அதை ஆற்றும் மருந்தாகிறது. காய்ச்சலைத் தணிவிக்கிறது. பேதி மற்றும் சீதபேதியைக் கட்டுப்படுத்துகிறது. பாம்புக்கடி  விஷம், தேள்கடி, பூரான் கடி போன்றவற்றால் உண்டான விஷத்தை முறிக்கவல்லது.
3. குருதிக்கசிவு அதாவது ஆசன வாயினின்று வெளிப்படும் ஹெமராய்ட்ஸ் என்னும் ரத்தக்கசிவு, கருப்பையினின்று வெளியேறும் அதிகமான குருதிப்போக்கு, சிறுநீர்த்தரை வழியே வெளியேறும் குருதிக்கசிவு, இருமும்போது நெஞ்சகச் சளியோடு குருதி கலந்து வெளியேறுவது போன்ற அசாதாரண நிலைகளில் வெப்பாலைப் பட்டைச் சூரணமும் மிளகும் சேர்ந்த தீநீர் உடலை தேற்றும் உன்னத மருந்தாகிறது.
4. வெப்பாலைப் பட்டையைப் பசுமையாக இடித்துச் சாறு எடுத்து இரண்டு தேக்கரண்டி அளவு சாறுடன் பசும்பால் சேர்த்துப் பருகி வர சிறுநீரக நோய்கள் பலவும்  சீர்பெறும்.
5. வெப்பாலை இலைகளை அரைத்து விழுதாக்கி அக்கிப் புண்கள் பொன்னுக்கு வீங்கி என்று சொல்லப் பெறும் புட்டாலம்மை ஆகியவற்றின் வலியைக் குறைத்து வீக்கத்தைத் தணிவிக்கச் செய்யும். வெப்பாலை இலைகளை போதிய அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நான்கைந்து நாட்கள் நல்ல சூரிய ஒளி படும்படி  வைத்து சூரிய புடமிட்டு வைக்க எண்ணெய் நன்கு நீல நிற வண்ணம் பெறும்.
6. இந்த எண்ணெயை வடித்து பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு மேற்பூச்சாகப் பூசிவர உடலில் செதில் செதிலாகக் கொட்டி அரிப்பும், துர்நாற்றமும்  மன உளைச்சலும் உண்டாக்கக்கூடிய தோல் நோயான சொரியாஸிஸ் குணமாகும்.
7. வெப்பாலை இலையோடு சிறிது உப்பு சேர்த்து மென்று சிறிது நேரம் வாயில் வைத்திருந்து துப்பிவிட பல்வலி பற்சொத்தை குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *