Benefits of kadukkai

benefits:

கடுக்காயில் உள்ள சதை பகுதியை மட்டும் பயன்படுத்தவும், கொட்டை விஷ தன்மையுடையது. எனவே அதனை நீக்கி விடவது நலலது.

1. கடுக்காய் வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆற்றிடும் வல்லமை பெற்றது. மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும். பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும்.

2. காது நோய் குணப்படுத்தும். கடுக்காய் வலிமையூட்டி, நீர்பெருக்கி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கை கால் நமச்சல், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளை குணப்படுத்தும்.
3. காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என 48 நாட்கள் இதன் பொடிகளை உட்கொண்டால் நரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாழலாம்
4. கடுக்காய் ஓட்டைத்தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.
5. மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டுவர, ஜீரணசக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.
6. கடுக்காய்த் தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டுவர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.
7. 15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.
http://tmpooja.com/shop/coral-pavazham-crystal-lotus-beads-navaratna-mala-rudraksha-sandal-spatika-mala-tulsi/5-muga-rudhrakshamala-with-fabric-decorating/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *